வெளியானது குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Group 2 & 2A
TNPSC
Published on

தமிழ்நாட்டில் அரசு வேலைகளைப் பெற ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வை எழுதி வருகின்றனர். அவ்வகையில் கடந்த வாரம் குரூப்4 தேர்வு முடிவடைந்த நிலையில், தற்போது குரூப்2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி குரூப்2 முதல் நிலைத் தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

குரூப்4 தேர்வு முடிந்தவுடன், குரூப்2 தேர்வு குறித்த விவரங்கள் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு நற்செய்தியை அறிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி. குரூப்2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குரூப்2 மற்றும் 2ஏ தேர்வுகளின் மூலம் 645 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தோராயமானது; தேர்வு முடிந்து கலந்தாய்வு நேரத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் வனவர் உள்ளிட்ட 645 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (குரூப்2 & 2ஏ) அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அரசு தேர்வாணயத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in என்ற பக்கத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கான கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டது படி தொடர்ச்சியாக 13 முறையாக அரசு தேர்வுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2018 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் முதன்முறையாக 2024 மற்றும் 2025 ஆகிய 2 ஆண்டுகளில் தொடர்ச்சியாக குரூப்2 மற்றும் 2ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு - என்னென்ன வேலைவாய்ப்புகள் இருக்கு தெரியுமா?
Group 2 & 2A

தேர்வர்களின் நலன் கருதி குரூப் 2ஏ பணிகளின் தேர்வுத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும். அரசு வேலைக்கான கனவில் பயணித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு நற்செய்தியாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை தள்ளி வைத்தது TRB!
Group 2 & 2A

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com