

நாட்டு நலனுக்காக தாய்மார்கள், சகோதரிகள், மகள்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
மசோதா நிறைவேற்றப்படாததற்கு பெண்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
இது யாருடைய அதிகாரத்தையும் பறிக்கும் செயல் அல்ல. அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
மகளிர் கவுரவத்தை எதிர்க்கட்சிகள் காயப்படுத்தியுள்ளன. இந்த அவமானத்தை மறக்க மாட்டார்கள். ஒவ்வொரு பெண்மணியின் மனதிலும் இந்த அவமானம் நிரந்தரமாக கூடியிருக்கும்.
மகளிர் சக்தியை எதிர்க்கட்சியினர் உதாசினம் செய்து பாவம் செய்துவிட்டனர். எதிர்க்கட்சியினர் செய்த பாவத்துக்கு நிச்சயம் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.
பெண் சக்திக்கான திட்டத்தை தடம் புரள வைத்தனர். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் மகளிர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்தனர்.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி உள்ளன. சுயநல அரசியலுக்காக பெண்களை புண்படுத்தினர்.
நடக்கும் அனைத்தையும் நாட்டு பெண்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகளை நாட்டுப் பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். மசோதா தோற்கடிக்கப்பட்டதன் விளைவுகளை காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை எதிர்காலத்தில் சந்திக்கும்.
மகளிர்க்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். 21ஆம் நூற்றாண்டில் நடக்கும் அனைத்தையும் நாட்டு பெண்கள் கவனித்து கொண்டு இருக்கின்றனர்.
மகளிர் கௌரவத்தை காயப்படுத்தியுள்ளனர். 40 ஆண்டுகளாக பெண்கள் இட ஒதுக்கீட்டுக்காக காத்திருந்தனர்.
ஒட்டுமொத்த நாடும் சோகத்தில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. வாரிசு அரசியல் செய்யும் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை பெண்கள் தோற்கடிக்கப்பட்டதை கொண்டாடி வருகின்றனர்.
அரசியலுக்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெண்களை புண்படுத்தனர். மசோதாவை தோற்கடித்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்திரை கிழித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்கும் என மிகவும் எதிர்பார்த்தேன். மாநில கட்சிகள் வளர்வதை காங்கிரஸ் ஒருபோதும் விரும்பியதில்லை.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் குறைகளை மட்டுமே கூறி வந்தன. வடக்கு, தெற்கு என பிரித்துப் பார்த்ததே இல்லை. பெண்களுக்கு உரிமைகளை கொடுப்பதற்கான பாஜகவின் நேர்மையான முயற்சியை எதிர்க்கட்சிகள் சிதைத்து விட்டனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டத்தையும் காங்கிரஸ் எதிர்க்கிறது. மறுசீரமைப்பால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்புகள் ஏற்படாது. அதனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பலன் அளிக்கும்.
மறுசீரமைப்பு குறித்த பொய்யான தகவல்களை காங்கிரஸ் பரப்பியது. அதன் கூட்டணி கட்சிகளின் தீய எண்ணங்களை நாடு உணர்ந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பிரிவினை அரசியலில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சாடியும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாகவும் பேசி உரையை முடித்தார் பிரதமர் மோடி.