

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17இ(iPhone 17e) மாடலை நேற்று(மார்ச் 2) அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் வருகிற மார்ச் 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த பட்ஜெட் விலை iphone மாடலின் விலை ரூ.64,900 முதல் தொடங்குகிறது. ஐபோன் 17இ மாடலின் பேசிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை இது. இது கடந்த ஆண்டு வெளியான iphone 16இ மாடலை விட இரண்டு மடங்கு அதிக ஸ்டோரேஜ் ஆகும். இதே மாடலின் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,900அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் அறிமுகமான வேகத்தில், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவானது கடந்த ஆண்டு அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 16இ மாடலுடைய விலையை வெகுவாகக் குறைத்துள்ளது.
அமேசான் தளத்தில், ஐபோன் 16e மாடலின் அடிப்படை 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அறிமுக விலை ₹59,900-ஆக இருந்தது. தற்போது ₹7,510 குறைந்து ₹52,390-க்குக் கிடைக்கிறது. வங்கித் தள்ளுபடிகள் (Bank Discounts) அல்லது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போன்ற கூடுதல் சலுகைகளைப் பயன்படுத்தினால், இந்த மாடலின் விலையை இன்னும் குறைக்க முடியும்.
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஐபோன் 17இ பட்ஜெட் விலையில் சக்திவாய்ந்த அம்சங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிவேக செயல் திறனுக்காக சமீபத்திய A19 பயோனிக் சிப் மற்றும் 8 ஜிபி ரேம் பொருத்தப்பட்டுள்ளது. 6.1 அங்குல சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. 48MP ஃபியூஷன் கேமரா சிஸ்டம் மற்றும் 12MP TrueDepth முன் கேமரா, 4K டால்பி விஷன் வீடியோ பதிவு வசதி உள்ளது. அலுமினியம் பிரேம், 256GB அல்லது 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது மற்றும் தூசி/நீர் எதிர்ப்பிற்கு IP68 ரேட்டிங் உள்ளது. ஆக்சன் பட்டன்(Action Button), மேக்சேஃப்(MagSafe) வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் டூயல் சிம்(eSIM+nano) போன்ற கூடுதல் வசதிகள் உள்ளன.
பிரீமியம் மேட் பூச்சுடன் மூன்று நேர்த்தியான வண்ணங்களில் கருப்பு, வெள்ளை மற்றும் சாஃப்ட் பிங்க் வண்ணங்களில் கிடைக்கிறது. சிறந்த பேட்டரி ஆயுள், வேகமான சார்ஜிங்(30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும்). இது இந்தியாவில் மார்ச் 11 புதன்கிழமை முதல் கிடைக்கும்.