

இப்போல்லாம் நம்ம உடம்புக்குள்ள என்ன நடக்குதுன்னு நம்மள விட, நம்ம கூடவே சுத்துற கேட்ஜெட்ஸ் தான் அதிகமா தெரிஞ்சு வச்சிருக்கு.
அதுல, டெக் உலகின் ராஜாங்கத்தை ஆளும் APPLE (ஆப்பிள்) ஒரு மாஸ் விஷயம் பண்ணியிருக்காங்க.
அது என்னன்னா, ஆப்பிள் வாட்ச் மூலமா கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு மேல் இருக்கிறவங்களுக்கு உயர் இரத்த அழுத்த அபாயம் (Hypertension) இருக்குன்னு நோட்டிஃபை பண்ணப் போறாங்களாம்!
கையும் களவுமா பிடிக்கும் 'பிளட் பிரஷர்'
பொதுவா, உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹை பி.பி.-யை "சைலன்ட் கில்லர்"னு சொல்லுவாங்க.
ஏன்னா, அது யாருக்கும் தெரியாம உள்ள வந்து உடம்பைப் பதம் பார்க்கும். ஆனா, இனிமேல் அந்த 'சைலன்ட் கில்லர்' பி.பி-யை நம்ம Watch ரகசியமா நோட் பண்ணிடும்!
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, 11, மற்றும் அல்ட்ரா 2, 3 போன்ற புது மாடல்களில் இந்த வசதி இருக்கு.
இந்த Watch-ல இருக்குற ஆப்டிகல் ஹார்ட் சென்சார் (Optical Heart Sensor) ஒரு நிமிஷம் கூட விடாம நம்ம ரத்த நாளங்கள் எப்படி துடிக்குதுன்னு கவனிச்சுக்கிட்டே இருக்குமாம்.
இந்தத் தகவல்களை பெரிய மெஷின் லேர்னிங் (Machine Learning) அல்காரிதம்கள் மூலமா 30 நாட்களுக்குத் தொடர்ந்து அலசி ஆராய்ந்து, உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்குன்னு Watch-க்குத் தெரிஞ்சா உடனே அலர்ட் (Alert) கொடுக்குமாம்.
டிம் குக் (Tim Cook) சொல்ற மாதிரி, உலகத்துல சுமார் 130 கோடி பேரை அச்சுறுத்துற இந்த நிலையை, ஒரு மில்லியன் பேருக்கு மேல இருக்கிறவங்களுக்கு Watch மூலமா நாங்க தெரிவிப்போம்னு சொல்றது கேட்கவே ஆச்சரியமா இருக்கு.
நம்ம Watch இப்போ வெறும் டைம் மட்டும் சொல்லல, நம்ம உசுரையும் சேர்த்து காப்பாத்துற பாடி கார்டா மாறிடுச்சு!
தூக்கத்தையும் நோட் பண்ணும் Watch!
பி.பி. மட்டுமா? இல்லை! நம்ம தூக்கத்தை நல்லா புரிஞ்சுக்க உதவற ஸ்லீப் ஸ்கோர் (Sleep Score) வசதியைப் பற்றியும் டிம் குக் பேசியிருக்கார்.
"எல்லாருக்கும் இது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்"னு அவர் சொல்லியிருக்கார். அடேங்கப்பா, Watch-ஆ, நீ என் பி.பி.யை மட்டும் பார்க்கல, நான் ராத்திரி சரியா தூங்குனேனான்னு மார்க் போட்டு, என் தூக்கத் தரத்தை (Sleep Quality) மதிப்பிடவும் போறியா? (கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!) ஆனா, இது எல்லாமே நம்ம ஆரோக்கியத்துக்கு உதவத்தான்!
$9 பில்லியன் வருமானம்!
இவ்வளவு பெரிய ஹெல்த் வசதிகளைக் கொண்டு வந்ததன் மூலமா, ஆப்பிளுக்கு Q4 2025 காலாண்டில், Wearables, Home, மற்றும் Accessories (அணியக்கூடிய சாதனங்கள், வீடு மற்றும் உபகரணங்கள்) பிரிவில் மட்டும் 9 பில்லியன் டாலர் வருமானம் வந்திருக்காம்.
ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குறதுல Apple-ம் காசு பார்க்குது, மக்களும் நல்லா இருக்காங்க. இதுதானே டெக்னாலஜியோட வளர்ச்சி!
ஆகமொத்தம், ஆப்பிள் வாட்ச் இப்ப வெறும் ஃபேஷன் ஸ்டேட்மென்ட் இல்லை. அது ஒரு மினி டாக்டர், செக்யூரிட்டி கார்ட், அப்புறம் தூக்கத்தை அளக்கும்,தூக்கத்தைக் கண்காணிக்கும் நண்பன்னு பல வேலைகளைப் பார்க்குது!