
தமிழக கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உதவியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி 2,000 உதவியாளர்கள் பணிக்கு அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணிக்கு இந்தியக் குடியுரிமை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 157 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் வேலூர் மாவட்டத்தில் 41, மதுரையில் 35, காஞ்சிபுரத்தில் 19 உள்பட தமிழ்நாடு முழுக்க மொத்தம் 2,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன், கூட்டுறவுத் துறை பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2025 அன்று 18 வயதை நிறைவு செய்தவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: சென்னை கூட்டுறவு சங்கத்திற்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் https://www.drbchn.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இருப்பினும் தேர்வு முறை அனைவருக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகின்ற ஆகஸ்ட் 29 மாலை 5:45 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவுக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250.
கூட்டுறவுத் துறை விண்ணப்பங்களை சரிபார்த்து தகுதியான விண்ணப்பதாரர்களை மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அழைப்பர். தேர்வுக் கூட நுழைவுச்சீட்டை தேர்வு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை எழுத்துத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இரண்டு கட்ட தேர்வுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு 044-24614289 என்ற சென்னை மாவட்ட கூட்டுறவு சங்க உதவி எண்ணை அழைக்கலாம்.