
நாடு முழுவதும் செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள இடங்களை வங்கிகள் பணியாளர் தேர்வாணையம் (IBPS) போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அவ்வகையில் தற்போது 10,277 கிளார்க் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது IBPS. ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் இந்த வேலைக்கு வருகின்ற ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளார்க் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டில் 894 காலியிடங்களும், புதுச்சேரியில் 19 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பணியின் பெயர்: Customer Service Associates (Clerk)
காலிப் பணியிடங்கள்: 10,277. (தமிழ்நாடு - 894, புதுச்சேரி -19)
சம்பள விகிதம்: ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை
வயது வரம்பு: 2025 ஆகஸ்ட் 21 அன்று விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தகுதிகள்: ஏதாவதொரு பாடப் பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: 100 மதிப்பெண்களுக்கு முதல் நிலைத் தேர்வும், 200 மதிப்பெண்களுக்கு முதன்மைத் தேர்வும் வங்கிக் பணியாளர் தேர்வாணையம் நடத்தப்படும். இந்த இரண்டு தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடைபெறும். ஆங்கிலப் பாட வினாக்களைத் தவிர, மற்ற பாடத்தில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு தமிழில் பதில் எழுத முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.ibps.com என்ற இணையதளத்தின் மூலமாக கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு எதிர்காலத் தேவைக்காக விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.
தேர்வு மையங்கள்: சென்னை, தருமபுரி, ஈரோடு, நாகர்கோவில், நாமக்கல், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர், கோவை, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, சேலம், திருச்சி, தூத்துக்குடி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் மாதம் முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் மாதத்தில் சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, விருதுநகர், கோவை, நாமக்கல், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் முதன்மைத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.175-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்துப் பிரிவினர்களும் ரூ.850 செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 21.08.2025.