சென்னை பயணிகளுக்கு ஜாக்பாட்: அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..!

Arakkonam - chengalpattu train
Arakkonam - chengalpattu train image source:dailythanthi
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

அரக்கோணம் - செங்கல்பட்டு இடையேயான இரண்டாவது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில் தற்போது புதிய ஒப்புதலை மத்திய அரசாங்கம் அளித்துள்ளது. ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அரக்கோணம் - செங்கல்பட்டு என்பது சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான சென்னைப் புறநகர் வட்ட ரயில் பாதை வலையமைப்பாகும். இந்த வழித்தடம் சுமார் 68 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

பரபரப்பான சென்னை புறநகர் ரயில் பாதையில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதில் இந்த இரட்டை வழிச்சாலைத் திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுதுடன் பயணிகளின் போக்குவரத்தை வலுப்படுத்தவும் உதவும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சிமெண்ட், வாகனங்கள், உணவு தானியங்கள், இரும்பு மற்றும் எஃகு உள்ளிட்ட முக்கிய பொருட்களின் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் இரண்டையும் வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

தற்போது உள்ள இரட்டை வழித்தட பிரிவு அதிகபட்ச பயன்பாட்டில் இயங்கி வருகிறது. வரும் ஆண்டுகளில் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் மேம்பாடு அவசியமாகிறது. இந்த வழித்தடம் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள பல பெரிய நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது. அரக்கோணம் - செங்கல்பட்டு வழித்தடம் முக்கியமான ஆட்டோமொபைல், சிமெண்ட் மற்றும் உற்பத்தி தொழில்களுக்கும் உதவக்கூடும். மேலும் காஞ்சிபுரத்துக்கு அருகில் பரந்தூர் விமான நிலைய திட்டமும் இந்த வழித்தடத்திற்கு அருகே அமைந்துள்ளதால் இத்திட்டம் மேலும் முக்கியத்துவம் பெறும்.

இத்திட்டம் புறநகர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு உதவுவதுடன் தொழில்துறை வளர்ச்சிக்கும் பாதுகாப்பான சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கடைகளில் எம்எல்ஏக்கள் திடீர் ஆய்வு- இனி ரேஷன் பொருள்கள் எடை குறையாது மக்களே..!
Arakkonam - chengalpattu train
logo
Kalki Online
kalkionline.com