

தமிழக முதல்வர் விஜய் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான THE GOAT திரைப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு சார்பில் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வருமானம் அதிகம் ஈட்டக் கூடிய கோவில்களுக்கு , அறங்காவலர்களை தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்வதற்கு என்று 7 ஏழு பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்நிலைக் குழு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் புதிய அறங்காவலர்களை விசாரித்து நேரில் அழைத்து கலந்துரையாடி அவர்களுக்கு அறங்காவலர் பொறுப்பு வழங்க பரிசீலனை செய்கிறது. இந்த ஏழு பேர் கொண்ட குழுவில் அர்ச்சனா கல்பாத்தியும் ஒருவராக தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அர்ச்சனா கால்பாத்தி விஜய் அரசியல் கட்சி தொடங்கிய போது, அவரது முதல் இறுதி திரைப்படமாக கருதப்பட்ட 'கோட் ' திரைப்படத்தினை தயாரித்தார். அந்த திரைப்படத்தை தயாரிக்கும் பொழுது, நான் ஒரு ரசிகையாக அந்த திரைப்படத்தை தயாரித்ததாக பெருமையுடன் கூறினார்.
ஏஜிஎஸ் எண்டர்டைன்மெண்ட் என்ற பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் அர்ச்சனா கல்பாத்தி. இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட , ஏராளமான திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் , சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்த திருட்டு பயலே இந்த திரைப்படத்தின் மூலமாக திரைப்படத் தயாரிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தது. அதைத்தொடர்ந்து இந்த நிறுவனம் சந்தோஷ் சுப்ரமணியம், மதராசபட்டினம், தனி ஒருவன் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி பெற்ற பல படங்களை தயாரித்து வந்தது.
இந்த நிறுவனம் தங்களின் புகழ் பரவத் தொடங்கியதும் விஜயை கதாநாயகனாக வைத்து ஒரு சில திரைப்படங்களை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படங்கள் இவர்களை நிறுவனத்திற்கு நல்ல பெயரையும் , நிறைய விளம்பரங்களையும் பெற்று தந்துள்ளது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ' பிகில்' திரைப்படம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து 'தி கோட்' திரைப்படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு இருந்தது. இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த் ,மோகன், அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றியிருந்தார். அன்றைய காலகட்டத்தில் விஜயின் கடைசி திரைப்படமாக இந்த திரைப்படம் பேசப்பட்டிருந்தது. இடைப்பட்ட காலத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய 'லவ் டுடே' திரைப்படத்தின் மூலம் அர்ச்சனா மீடியாக்களின் வெளிச்சத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'டிராகன்' திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தின் மூலம் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் இணைந்த இவருக்கு, தற்போது அறங்காவலர் தேர்வு குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 'ஜனநாயகன் ' திரைப்பட தயாரிப்பாளர்
வெங்கட் நாராயணா , தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.