
மத்திய அரசின் கீழ் பல்வேறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 34 பணியிடங்கள் உள்ளன. மத்திய அரசு வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாகும்.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம், இந்தியா முழுவதிலும் 29 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் 1500-க்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
இந்தியா முழுக்க 500 மற்றும் தமிழ்நாட்டில் 34 பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
21 முதல் 30 வயதுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதாரர் எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்கிறாரோ அம்மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
உதவியாளர் பணிக்கு ரூ.22,405 முதல் ரூ.62,265 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: உதவியாளர் பணிக்கு 2 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறவுள்ளன. முதல் கட்டத் தேர்வு 07.09.2025 அன்று நடைபெறும். முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 28.10.2025 அன்று இரண்டாம் கட்டத் தேர்வு நடைபெறும்.
தமிழ்நாட்டில் முதல் கட்டத் தேர்வு சென்னை, திருச்சிராப்பள்ளி, கோவை, மதுரை, நாகர்கோவில், விருதுநகர் மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும். இரண்டாம் கட்டத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.
https://www.orientalinsurance.org.in/ என்ற இணையதளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு வேலைகளில் சேருவதை கனவாக கொண்டிருக்கும் இளைஞர்கள் காலக்கெடு முடிவதற்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.