எடிட் செய்யப்பட்ட வீடியோ.. பாகிஸ்தானின் போலி பிரச்சாரம் அம்பலம்! முழு பின்னணி இதோ!

Lieutenant General Devendra Sharma
Lieutenant General Devendra Sharmaimage credit- @ANI
Updated on

பாகிஸ்தானின் பிரச்சாரக் கணக்குகள் லெப்டினன்ட் ஜெனரல் தேவேந்திர சர்மா குறித்து பரப்பும் வீடியோ முற்றிலும் போலியான 'ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ்' (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் (Deepfake) காணொளியாகும். 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அவர் எந்தப் புகாரோ, தகவலோ தெரிவிக்கவில்லை என இந்திய அரசின் PIB Fact Check பிரிவு உறுதி செய்துள்ளது.

அதாவது ராணுவ பயிற்சி பிரிவின் தலைமை தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் தேவேந்திர சர்மா (Lieutenant General Devendra Sharma) குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ முற்றிலும் போலியானது மற்றும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டது (Deepfake). காம்பாட் ஆர்மி ஏவியேஷன் பயிற்சி பள்ளியில் அவர் பேசிய அசல் வீடியோவை திரித்து, 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) நடவடிக்கைக்குப் பிறகு 5 விமானிகள் காணாமல் போனதாக தவறான தகவல்கள் பரப்பும் அந்த வீடியோ, டிஜிட்டல் முறையில் திரிந்து உருவாக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த போலியான செய்திகளை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது போன்ற தவறான தகவல்கள் வேண்டுமென்றே பீதியை உருவாக்கவும், பொய்யான கதைகளைப் பரப்பவும் திட்டமிடப்பட்டவை என்று உண்மை கண்டறியும் குழுக்கள் (Fact Check) எச்சரித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
'ஆபரேஷன் சிந்தூர்' - அந்த 25 'திக், திக்' நிமிடங்கள்...
Lieutenant General Devendra Sharma

டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட அந்த காணொளியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பங்கேற்ற 59 அதிகாரிகளில் ஐந்து பேர் காணாமல் போனதாகவும், அவர்கள் கடைசியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது நான்கு ரஃபேல் மற்றும் ஒரு எஸ்யு-30 எம்கேஐ ரக போர் விமானங்களை இயக்கிய போர் விமானிகளாக செயல்பட்டதாகவும் அவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று லெப்டினன்ட் ஜெனரல் தேவேந்திர சர்மா கூறியதாக ஒரு வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டு பகிரப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். லெப்டினன்ட் ஜெனரல் தேவேந்திர சர்மா அத்தகைய எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மேலும் புனையப்பட்ட இந்த ஆடியோவில், ஐந்து அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, ராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 59 அதிகாரிகளின் பெயர்கள் இருந்தன. ஆனால் இந்த பெயர்களில் ஐந்து அதிகாரிகள் விடுபட்டிருந்தனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நாங்கள் தொடர்ந்து சரிபார்த்து வந்தோம்.

ஆனால் அவர்கள் கடைசியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது நான்கு ரஃபேல் மற்றும் ஒரு எஸ்யு-30 என்.கே.ஐ ஜெட் விமானங்களுக்கு போர் விமானிகளாக செயல்பட்டபோது காணப்பட்டனர். அவர்கள் பயிற்சியில் இல்லை, எங்களால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர்களின் பெயர்கள் அசோக்குமார், அஷிஷ் சௌஹான், குமார் படேல், தினேஷ் படேல் மற்றும் அசோக் சக்ரவர்த்தி. எதிர்காலத்தில் எந்த முரண்பாடுகளும் ஏற்படாதவாறு, மத்திய அரசுக்கு சரியான பட்டியலை அனுப்புவது முக்கியம் என்று லெப்டினன்ட் ஜெனரல் சர்மா அத்தகைய அறிக்கைகளை வெளியிட்டார் என்ற தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காக புனையப்பட்ட காணொலி, தவறாக வழிநடத்தும் திருத்தங்கள் மற்றும் மாற்றப்பட்ட உள்ளடக்கம் ஆகியவற்றின் மூலம் அந்த காணொளி திரிக்கப்பட்டுள்ளது என்று ஆயுத படைகள் உண்மை சரிபார்ப்பு(Armed forces fact check} என்ற உண்மை சரிபார்ப்பு அமைப்பு தெளிவுபடுத்தியது.

பரவி வரும் காணொளியானது டீப்ஃபேக் செய்யப்பட்ட ஒரு உள்ளடக்கம் என்று கூறிய அந்த அமைப்பு தவறான தகவல்களை பரப்புவதற்காக ஒரு திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்த காணொளி உள்ளதாக கூறியுள்ளது.

தவறான கூற்றுகளை மறுப்பதற்காக உண்மை சரிபார்ப்பு தளம், திரிவுபடுததப்பட்ட உள்ளடக்கம் பெறப்பட்ட அசல் காணொளியை பகிர்ந்துள்ளது.

உண்மைப் பதிவில், லெப்டினன்ட் ஜெனரல் தேவேந்திர சர்மா 'காம்பாட் ஆர்மி ஏவியேஷன் டிரெய்னிங் ஸ்கூல்' (CATS) பயிற்சியை முடித்த 59 அதிகாரிகளின் கலந்து கொண்டு ராணுவ அதிகாரிகள் விமானப் பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக முடித்தது குறித்து பேசியதே அசல் வீடியோவாகும். அந்த ஒரிஜினல் ஆடியோவை எடிட் செய்து, தவறான ஆடியோவை (Fabricated audio) இணைத்து பாகிஸ்தான் தரப்பு திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
'ஆபரேஷன் சிந்தூர்' Live Updates: பாகிஸ்தான் ஷெல் தாக்குதல்… ட்ரம்ப் பதற்றம் தணிய விருப்பம்!
Lieutenant General Devendra Sharma

பாதுகாப்புப் படைகள் மற்றும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இதுபோன்ற போலியான டிஜிட்டல் மனிபுலேட்டட் (Digitally manipulated) தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. எனவே, சமூக வலைத்தளங்களில் வரும் இத்தகைய தகவல்களை நம்பாமலும், பகிர்ந்திடாமலும் இருக்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? பரபரப்பை கிளப்பிய 'அந்த' கடிதம்.!
Lieutenant General Devendra Sharma
logo
Kalki Online
kalkionline.com