புதிய சட்டம் அமல்..! இனி 2-வது திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை...ரூ.1.5 லட்சம் அபராதம்..!

2 marriage
2 marriage
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

அசாமில் பாஜக அரசு ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஹிமந்தா பிஸ்வா சர்மா அம்மாநில முதல்வராக உள்ளார். இந்நிலையில் அங்கு குளிர்கால சட்டசபை தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பலதார மணத்தைத் தடை செய்யும் மசோதாவை (The Assam Prohibition of Polygamy Bill, 2025) முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்பிறகு இந்த மசோதா எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நிறைவேறியது.

இந்த மசோதா இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பிற அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் உள்ளடக்கும் என்று முதல்வர் ஹிமந்தா சர்மா தெரிவித்துள்ளார்.

முதல் திருமணத்திலிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், அதாவது முந்தைய திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தவிர, சட்டவிரோத பலதார மணத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் பிரிவும் இதில் அடங்கும். அத்தகைய திருமணங்களைச் செய்துவைப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளிகளுக்கு இரு மடங்கு தண்டனை விதிக்கப்படும். மேலும் பலதார மணம் செய்பவர்கள் அரசு வேலைக்கு தகுதியற்றவர்களாக கருதி, அவர்களுக்கு அரசு நிதிஉதவி, மானியம் வழங்கப்படாது. அதுதவிர எந்தவொரு தேர்தலிலும் அவர்கள் போட்டியிட முடியாது.

இருப்பினும், பட்டியல் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆறாவது அட்டவணையின்கீழ் போடோலாந்து, கர்பி அங்லாங் மற்றும் வடக்கு கச்சார் ஹில்ஸ் ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இந்த சட்டம் செல்லாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மாநிலங்களவையில் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!
2 marriage

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஹிமந்தா, ‘இந்தச் சட்டம் அனைத்து மதத்தினருக்குமானது. சிலர் நினைப்பது போல முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. புதிய மசோதாவில், இந்தக் குற்றம் (பலதார மணம்) அடையாளம் காண முடியாததாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் விதிகளின்கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்காது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான் மீண்டும் முதல்-மந்திரியானால், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவேன். இது இந்த அவைக்கு நான் அளிக்கும் உறுதிமொழி’ என்றார்.