90% பேருக்கு தெரியாத சூப்பர் ரகசியம்..! உங்க ATM கார்டில் ரூ.10 லட்சம் இலவச இன்சூரன்ஸ் இருக்கு..!

ஏடிஎம் கார்டு விபத்து காப்பீடு பெற வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விதிமுறைகள்.
Debit Card
Debit CardAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

ஒரு சாதாரண ஏடிஎம் கார்டில் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் இலவசமாக விபத்துக் காப்பீட்டு (Free accidental insurance coverage) இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்.

பெரும்பாலான மக்களுக்கு (சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு) தங்கள் ஏடிஎம் / டெபிட் கார்டுகளில் (ATM / Debit Card) இத்தகைய இலவச விபத்துக் காப்பீடு (Free Accidental Insurance Coverage) இருப்பது தெரிவதில்லை.

தற்போதைய காலக்கட்டத்தில் மக்களின் தேவைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளன வங்கிகள், தொடர்ச்சியாக மக்களுக்கு பல்வேறு விதமான புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மக்கள் எளிமையாக பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக வங்கிகளில் கொடுக்கப்படுவது தான் ஏடிஎம் கார்டுகள். அந்த வகையில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரிடமும் ஏடிஎம் கார்டு இருக்கும்.

ஒருவர் ஏடிஎம் கார்டு மூலமாக 10 லட்சம் ரூபாய் வரைக்கும் இலவசமாக விபத்துக் காப்பீட்டு பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? டெபிட் கார்டு (Debit Card) வைத்திருப்பவர்களுக்கு, அவரவர் வங்கி கிளையை பொறுத்து காப்பீடு தொகை மாறுபடும். இதற்கு ஒரு வங்கியின் ஏடிஎம் கார்டை குறைந்தபட்சமாக 60 நாட்களுக்கு பயன்படுத்தி இருக்கே வேண்டியது கட்டாயம்.

நாட்டில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளும், ஏடிஎம் கார்டு (ATM Card) வைத்திருப்பவர்களுக்கு அவசர சிகிச்சை மற்றும் விபத்து மரணம் கவரேஜ்களை வழங்குகின்றன.

இந்த காப்பீட்டுத் தொகையானது வங்கிகள் மற்றும் கார்டு வகைகள் மற்றும் வாடிக்கையாளரின் வங்கி பரிவர்த்தனைகளைப் பொறுத்து ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை அல்லது அதற்கு மேல் வழங்கப்படும். ஆனால் இந்த தகவலை வங்கிகள் தங்களின் வாடிக்கையாளருக்கு வழங்குவதில்லை.

டெபிட் கார்டுகளில் (Debit Cards) வழங்கப்படும் இலவச விபத்து காப்பீட்டுத் தொகை (Free Accidental Insurance Cover) கார்டின் வகையைப் பொறுத்து மாறுபடும்:

நீங்கள் வைத்துள்ள ஏடிஎம் கார்டின் வகையைப் பொறுத்து (Classic, Gold, Platinum, Signature போன்றவை) காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை (சில பிரீமியம் கார்டுகளுக்கு மேலும் அதிகமாக) மாறுபடும். விபத்தால் மரணம் ஏற்பட்டாலோ அல்லது நிரந்தர உடல் ஊனம் உண்டானாலோ இந்த காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

Debit Cards|விபத்துக் காப்பீடு
Debit Cards|விபத்துக் காப்பீடுimage credit-travelogyindia.com

கிளாசிக் ஏடிஎம் கார்டு (Classic Card): ரூ. 1 லட்சம் வரை காப்பீடு

பிளாட்டினம் ஏடிஎம் கார்டு (Platinum Card): ரூ. 2 லட்சம் வரை காப்பீடு

சாதாரண மாஸ்டர் கார்டு (MasterCard): ரூ. 50,000 வரை காப்பீடு

பிளாட்டினம் மாஸ்டர் கார்டு (Platinum MasterCard): ரூ. 5 லட்சம் வரை காப்பீடு

விசா கார்டு (Visa Card): ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை காப்பீடு தொகை பெற முடியும்.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி, ரூபே கார்டு பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1 முதல் 2 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.

எஸ்பிஐ (SBI), ஹெச்டிஎப்சி (HDFC), ஐசிஐசிஐ (ICICI) போன்ற முன்னணி வங்கிகளின் சாதாரண மற்றும் பிரீமியம் டெபிட் கார்டுகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-ல் பணம் எடுப்பது எப்படி? முழு வழிகாட்டி!
Debit Card

இந்த இலவச காப்பீட்டைப் பெற, விபத்து நடப்பதற்கு முந்தைய குறிப்பிட்ட நாட்கள் அல்லது மாதங்களுக்குள் (வங்கி விதிமுறைகளின்படி, பொதுவாக 30 முதல் 90 நாட்களுக்குள்) அந்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு பரிவர்த்தனை (ஏடிஎம் பணம் எடுப்பது, ஆன்லைன் ஷாப்பிங் அல்லது POS இயந்திரத்தில் ஸ்வைப் செய்தல் அல்லது பேலன்ஸ் செக் செய்தல்) செய்திருக்க வேண்டும். கார்டு சும்மா பையிலோ வீட்டிலோ இருந்தால் காப்பீடு கிடைக்காது.

இது வங்கிகள் குழுவாக (Group Insurance) எடுத்துள்ள காப்பீடு என்பதால், தனித்தனியாக பாலிசி எண் வழங்கப்படுவதில்லை.

விபத்து ஏற்பட்டால், நாமினி அல்லது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அல்லது வாரிசுதாரர் 30 முதல் 90 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு நேரில் சென்று உரிய ஆவணங்களுடன் (மரணச் சான்றிதழ், FIR நகல், போஸ்ட் மார்ட்டம் அறிக்கை, கார்டு விவரங்கள்) நேரடியாக சம்பந்தப்பட்ட வங்கி கிளையை அணுகி காப்பீட்டுத் தொகையை கோரலாம். பின்னர், அவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவரின் கார்டு வகையை பொறுத்து வங்கிகள் பாதிக்கப்பட்டவருக்கான காப்பீட்டுத் தொகையை வழங்கும்.

இதையும் படியுங்கள்:
ஏடிஎம் கார்டு இருந்தா போதும்! உங்களுக்கான சரியான கண்ணாடி அளவை கண்டுபிடிக்கலாம்!
Debit Card

உடனே உங்கள் வங்கிக் கணினி அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று உங்கள் ஏடிஎம் கார்டுக்கு எவ்வளவு காப்பீடு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சிறந்தது.