ஏடிஎம் கார்டு இருந்தா போதும்! உங்களுக்கான சரியான கண்ணாடி அளவை கண்டுபிடிக்கலாம்!

எஸ், எம், எல்... உங்க கண்ணாடியின் சரியான அளவைக் கண்டறியும் எளிய ட்ரிக்!
கண்ணாடி அளவு
கண்ணாடி அளவுAI image
Updated on

மூக்குக் கண்ணாடி வாங்கும்போது முகவடிவத்துக்கு ஏற்ற பிரேம்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரை விரிவாக விளக்குகிறது. ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கண்ணாடி அளவை எஸ், எம், எல் என அளவிடும் முறையையும் கூறுகிறது. சதுர, வட்ட, நீள்வட்ட, இதய வடிவ முகங்களுக்கு ஏற்ற வட்ட, ஓவல், செவ்வக, ஏவியேட்டர், ரிம்லெஸ் போன்ற பிரேம்கள் எவை என்பதை தெளிவாக பட்டியலிடுகிறது.

மூக்குக் கண்ணாடி தேர்ந்தெடுப்பின்போது அணிந்து பார்த்து நமக்குப் பிடித்ததை எடுப்போம். மிக அமைப்புக்கேற்ற மூக்கு கண்ணாடியை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை பார்ப்போம்.

கண்ணாடியின் அளவைக் கண்டறிதல்:

தலையை நேராக உயர்த்தி ஒரு ஏடிஎம் கார்டின் பக்கவாட்டு பகுதியை கண்களுக்கு கீழ், மூக்கின் நடுப்பகுதியில் இருக்கும்படி வைக்கவும். ஏடிஎம் கார்டு முழுவதுமாக உங்கள் கண்களுக்குள் மறைந்தால் உங்கள் கண்ணாடியின் அளவு 'எல்'.

கார்டும் கண் அளவும் சரிசமமாக இருந்தால் கண்ணாடி அளவு 'எம்'.

கார்டை விட கண் அளவு சிறிதாக இருந்தால் கண்ணாடி அளவு 'எஸ்' ஆகும்.

இதையும் படியுங்கள்:
வரண்டுபோன உதடுகளுக்கு விடை கொடுங்கள்: ஜொலிக்கும் உதடுகளைப் பெற எளிய டிப்ஸ்!
கண்ணாடி அளவு

1. சதுர வடிவ முக அமைப்புக்கு;

பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கன்னம் ஆகியவையே சதுர வடிவ முக அமைப்பு உள்ளவர்கள் வட்ட வடிவம் அல்லது வடிவ கண்ணாடி பயன்படுத்தினால், முக அமைப்பு மென்மையாக காட்சியளிக்கும்.

மேலும் ஏவியேட்டர் வகை கண்ணாடிகள் கன்னத்தில் உள்ள சதை மற்றும் எலும்புகளை சமப்படுத்த உதவும். முக அமைப்பை சிறிதாக காட்ட 'ஓவல்' வடிவ கண்ணாடிகளையும் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் கூர்மையான மூலைகளைக்கொண்ட சதுர கண்ணாடிகளைத் தவிர்ப்பது நல்லது.

கண்ணாடி அளவு
கண்ணாடி அளவுAI image

2. வட்ட வடிவ அமைப்புக்கு:

பரந்த கன்ன எலும்புகள், சதைப்பிடிப்பான கன்னம் மற்றும் சற்று குறுகிய நெற்றி வட்ட முக அமைப்பாக வகைப்படுத்தப்படுகிறது.

இவர்கள் வட்ட வடிவ கண்ணாடிகள தவிர்ப்பது சிறந்தது. மாறாக கிளாசிக் மெட்ரோ ஸ்டைல் வை பெரர்கள் அல்லது நீள் செவ்வக வடிவ கண்ணாடிகளை தேர்ந்தெடுக்கலாம் இவை வட்ட வடிவ முகத்திற்கு அற்புதமான பொருந்தும்.

இதையும் படியுங்கள்:
கம்பீரமான தோற்றம்: உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ளும் எளிய வழிமுறைகள்!
கண்ணாடி அளவு

3. நீள் வட்ட வடிவ முக அமைப்புக்கு:

நீள்வட்ட முகம் கொண்ட ஒருவருக்கு பொருந்தும் ஒரு கண்ணாடி, மற்றொரு நீள் வட்ட முகம் உள்ள நபருக்கு பொருந்தாது.

எனவே கண்ணாடி தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். சதுரம் மற்றும் செவ்வக பிரேம்கள் நீள்வட்ட வடிவ முக அம்சங்களை மெருகூட்டி காட்டும். ஆகையால் பெரிய சதுர கண்ணாடிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

4. இதய வடிவ முக அமைப்பினருக்கு:

கிளாசிக் 'ஏவியேட்டர்' கண்ணாடிகள் இதய வடிவ முக அமைப்பினருக்கு கச்சிதமாக பொருந்தும்.

உங்கள் முக வடிவத்தை இன்னும் மெருகேற்ற 'ரிம்லெஸ் 'கண்ணாடிகள் அணிய எளிதாக இருக்கும்.

அதேசமயம் அழகாகவும் இருக்கும் மூக்கு பட்டைகள் கொண்ட உலோக பிரேம்கள் மற்றும் பற்றிய மெல்லிய பிரேம் கண்ணாடிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். உங்கள் முகத்தின் வசீகரத்தையும் அதிகரிக்கும்.

ஆன்லைனிலோ அல்லது கடைகளிலோ மூக்குக் கண்ணாடி வாங்கும் போது, அளவுகள் தவறாக அமைவதைத் தவிர்த்து, உங்கள் முகத்திற்கு கச்சிதமாக அடந்திடும் பிரேமைத் தேர்ந்தெடுத்து நாள் முழுவதும் சௌகரியமாக அணிய இந்த உத்தி உதவும்.

logo
Kalki Online
kalkionline.com