ஏப்ரல் 1 முதல் ATM, UPI, கிரெடிட் கார்டுகளில் வரப்போகும் மெகா மாற்றம்..!!

UPI, கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு பயன்பாடு மற்றும் கட்டணம் தொடர்பான விதிமுறைகள் ஏப்ரல் 1-ம்தேதி முதல் மாறுகின்றன. அதுகுறித்து வாடிக்கையாளர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ATM, UPI, Pan Card rules change april 1
UPI Withdrawals Count From April 1
Published on

ஏப்ரல் 1, முதல் இந்தியா முழுவதும் பல முக்கிய நிதி சார்ந்த மற்றும் அன்றாட வாழ்க்கை விதிகள் மாறவுள்ளன. குறிப்பாக, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், இந்த மாற்றங்களில் பல உங்கள் பொருளாதார நிலையைப் பாதிக்கக்கூடியவையாக அமையும். இந்த மாற்றங்கள் நிர்வாக அமைப்புகளை எளிமைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், அவை குடும்பங்களுக்கான செலவுகளை அதிகரிக்கக்கூடும்; இதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள மக்களின் அன்றாடச் செலவுகள், வங்கிச் செயல்பாடுகள் மற்றும் பயணத் திட்டமிடல் முடிவுகள் ஆகியவை பாதிக்கப்படலாம்.

UPIல் பணம் அனுப்ப புதிய விதிமுறை:

ஏப்ரல் 1 முதல் யுபிஐ, கார்டு மற்றும் வாலெட் பேமென்ட்கள் போன்ற டிஜிட்டல் பேமென்ட்களுக்கு இரண்டு அங்கீகார சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுகிறது. இதுவரை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் தர ஓடிபி உள்ளீடு செய்தாலே போதும் என்ற நிலை மாறி இனிமேல் ஒவ்வொரு பண பரிவர்த்தனையும் இரண்டு முறை நாம் சரி பார்க்க வேண்டியதாக இருக்கும்.

அதாவது ஒன்று ஓடிபி மற்றொன்று பின் நம்பர், பாஸ்வேர்டு, பயோமெட்ரிக் போன்றவற்றை நாம் கொடுக்க வேண்டியது இருக்கும். அதாவது நம்முடைய பணப்பரிவர்த்தனைக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றங்கள்! உங்கள் பாக்கெட் முதல் பயணம் வரை...எகிறப்போகும் விலை..!
ATM, UPI, Pan Card rules change april 1

வங்கி வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் விதிகள் மாற்றம்:

HDFC, PNB மற்றும் பந்தன் வங்கி போன்ற வங்கிகள் ஏடிஎம் விதிகளைப் புதுப்பித்து வருகின்றன. HDFC இனி யுபிஐ (UPI) மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளையும் இலவச வரம்பிற்குள் கொண்டு வருகின்றன. அதாவது, உங்கள் தொலைபேசி மூலம் பணம் எடுத்தாலும், அது ஒரு பரிவர்த்தனையாகக் கருதப்படும். இந்த வரம்பை மீறினால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த அறிவிப்பால் ஏடிஎம்ஐ மிதமாக பயன்படுத்துபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரையும், அடிக்கடி பயன்படுததுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரையும் செலவாகும்.

PNB சில கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பை ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை குறைத்துள்ளது. பந்தன் வங்கி பெருநகரங்களில் 3 இலவசப் பரிவர்த்தனைகளையும், மற்ற பகுதிகளில் 5 பரிவர்த்தனைகளையும் அனுமதிக்கும், அதற்குப் பிறகு அபராதம் விதிக்கப்படும். இது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அதிகரிக்க வாய்ப்பிருந்தாலும், அவசரமாகப் பணம் தேவைப்படுபவர்களுக்கு இது தவிர்க்க முடியாமல் ஒரு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

டிஜிட்டல் பண மோசடி பற்றி 3 வேலை நாட்களுக்குள் புகார் அளித்தாலோ அல்லது வங்கி தவறு இருந்தாலோ பணம் முழுமையாக திரும்ப கிடைக்கும்.

SBI பேங்க் ரிவார்டு பாயின்ட்கள் விதிகள் (SBI Reward Points Rules):

SBI கஸ்டமர்கள் இனிமேல் மாதத்துக்கு அதிகபட்சம் 60,000 ரிவார்டு பாயிண்ட்களை மட்டுமே ரீடெம்ஷன் செய்து கொள்ள முடியும். கூடுதலாக ரிவார்டு பாயிண்ட்களை வைத்திருந்தாலும், இந்த லிமிட்டுக்கு மேல் ரீடெம்ஷன் செய்ய முடியாது. அதை அடுத்த மாதத்தில் லிமிட்டில் செய்து கொள்ளலாம். ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கார்டு (Air India SBI Signature Card) மற்றும் போன்பே எஸ்பிஐ கார்டு பர்பிள் (PhonePe SBI Card PURPLE) ஆகியவற்றுக்கு இது பொருந்தாது. அதேபோல போன்பே எஸ்பிஐ கார்டு செலக்ட் பிளாக் (PhonePe SBI Card SELECT BLACK) கார்டுக்கும் இந்த விதிகள் பொருந்தாது.

HDFC வங்கி புதிய லாக்கர் விதிமுறை:

ஏப்ரல் 1 முதல் புதிய லாக்கர் விதிமுறைகளை அமல்படுத்துவதாக HDFC வங்கி அறிவித்துள்ளது. புதிய கட்டமைப்பின் கீழ், லாக்கரின் அளவு மற்றும் கிளை இருப்பிட வகைப்பாட்டின் அடிப்படையில் லாக்கர் வாடகை மாறுபடும். மெட்ரோ பிளஸ், மெட்ரோ, நகர்ப்புற, அரை நகர்ப்புற மற்றும் கிராமப்புறம் ஆகியவற்றின் அடிப்படையில் வாடகை இருக்கும். இதில் 18 சதவீத ஜிஎஸ்டியும் பொருந்தும். அணுகலை வழங்குவதற்கு முன்பு அனைத்து லாக்கர் வைத்திருப்பவர்களுக்கும் ஆதார்-இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்கியுள்ளது.

கிரெடிட் கார்டு விதிமுறை:

ஏப்ரல் 1 முதல் ஒரு நிதியாண்டில் கிரெடிட் கார்டு பில்களுக்கு மொத்தமாக ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக செலுத்தப்பட்டால், அந்த விவரம் Statement of Financial Transactions (SFT) மூலம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். மேலும், ரூ.1 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக செலுத்தினால் அந்த பரிவர்த்தனையும் தனியாக பதிவு செய்து கண்காணிக்கப்படும்.

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளுக்கு PAN எண்ணுடன் இணைக்கப்பட்ட கார்டுகள் மூலம் ரூ.10 லட்சம் வரையும், PAN இணைக்கப்படாத கார்டுகளில் ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவு செய்தால் அந்த தகவல் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும்.

SBI கேஷ்பேக் கார்டில் அதிகபட்ச கேஷ்பேக் ரூ.4000 வரை மட்டுமே கிடைக்கும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு தலா ரூ.2000 வரை மட்டுமே வழங்கப்படும்.

நிறுவனங்கள் வழங்கும் கார்ப்பரேட் கிரெடிட் கார்டுகளை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தினால், அந்த செலவு பணியாளரின் வருமானமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படலாம். எனவே அலுவலக செலவுகள் மற்றும் தனிப்பட்ட செலவுகள் தெளிவாகப் பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.

பணியில் உள்ள பலர் தங்கள் வீட்டு வாடகையை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செலுத்துகின்றனர். ஆனால், புதிய விதிகளின்படி வங்கிகள் இனி வாடகை செலுத்துதலுக்கு ஒன்று முதல் இரண்டு சதவீதம் வரை கூடுதல் பரிவர்த்தனைக் கட்டணத்தை வசூலிக்கும். அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு வெகுமதிப் புள்ளிகள் எதுவும் வழங்கப்படாது.

‘யு.பி.ஐ.’ மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி:

‘யு.பி.ஐ.’ மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் நடைமுறை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய முறைப்படி, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், கணக்கில் இருந்து பெற தகுதியான தொகையை உறுப்பினர்கள் தங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ‘யு.பி.ஐ.’ மூலம் நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும். பாதுகாப்பை உறுதி செய்ய, ‘யு.பி.ஐ.’ ‘பின்’ பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு, அதை டிஜிட்டல் கட்டணமாகவோ, ஏ.டி.எம். மூலம் பணமாகவோ எடுத்துக்கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஏப்ரல் 1 முதல்.. அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர்வு.!
ATM, UPI, Pan Card rules change april 1

பான் கார்டு ரூல்ஸ்:

முதல் ஒரு நாளில் ரூ.50,000 பணத்தை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும். இந்த லிமிட் ஏப்ரல் 1 முதல் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது. அதேபோல், சொத்து விற்பனை மற்றும் வாங்குதலில், இதுவரை ரூ.10 லட்சமாக இருந்த வரம்பு தற்போது ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்துகளுக்கு மட்டுமே இனி பான் எண் தேவைப்படும்.

இனிமேல் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வாகனங்கள் வாங்கினால் பான் கார்டு தேவையில்லை. ஹோட்டல் பில்கள் ரூ.1 லட்சம் மேல் சென்றால் மட்டுமே பான் கார்டு கேட்கப்படும். இந்த விதிகள் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் அமலாக இருக்கிறது.

ஏப்ரல் 1 முதல், நீங்கள் எவ்வளவு குறைந்த தொகைக்கு இன்சூரன்ஸ் எடுத்தாலும் பான் எண் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடுமையாகும் பான் அட்டை விதிகள்:

புதிய பான் விதிகளின்படி, பான் அட்டைக்கு விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்க ஆதார் அட்டையைத் தவிர கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது பிறப்பு சான்றிதழ், 10-ம் வகுப்பு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், மாஜிஸ்திரேட் வழங்கிய பிரமாணப் பத்திரம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் பயன்படுத்தலாம். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு அவற்றை முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நுகர்வோர் ஷாக்..! ஏப்ரல் 1 முதல் ஏசி, டிவி, வாஷிங் மெஷின் விலை உயர்கிறது..!
ATM, UPI, Pan Card rules change april 1

அதேபோல் பான் கார்டில் உள்ள பெயர் இனி ஆதார் கார்டில் உள்ளபடியே இருக்கும். மேலும் பழைய விண்ணப்பப் படிவங்கள் வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com