#BREAKING: ஏப்ரல் 1 முதல்.. அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர்வு.!

Tablets
Tablets
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி பாராசிட்டமால் மற்றும் ஆண்டிபயாட்டிக் மருந்துகள் உட்பட மொத்தம் 900 மருந்துகளின் விலை உயர்கிறது. இந்த விலை உயர்வு 0.65% இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. அதனை ஒப்பிட்டால் தற்போது உயர்த்தப்படும் விலை உயர்வு மிகவும் குறைவு தான் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

மொத்த விற்பனை விலை குறியீட்டின் அடிப்படையில், இந்த ஆண்டு மருந்துகளின் விலை சுமார் 0.65% உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது (2022 இல் 10.7%, 2024 இல் 1.74%) இது ஒரு சிறிய உயர்வாகவே கருதப்படுகிறது.

​தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள சுமார் 900 முதல் 1,000 வரையிலான மருந்து வகைகள் இதில் அடங்கும்.

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்திற்கு ஏற்ப மருந்து விலைகளை மாற்றியமைக்க மத்திய அரசு அனுமதிக்கிறது. ​தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் மருந்து தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள், பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரசிகர்களுக்கு அதிர்ச்சி.! ஐபிஎல் 2026 தொடக்க நிகழ்ச்சிகள் ரத்து.!
Tablets

* பாராசிட்டமால் (Paracetamol) போன்ற மாத்திரைகள், அசித்ரோமைசின் (Azithromycin), சிப்ரோஃப்ளோக்சசின் (Ciprofloxacin).

* ​தொற்று எதிர்ப்பு மருந்துகள்: மெட்ரோனிடசோல் (Metronidazole).

* காய்ச்சல், இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, தோல் நோய்கள் மற்றும் இரத்த சோகைக்கான மருந்துகள்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய இனி 55 நிமிடங்கள் போதும்.!
Tablets
logo
Kalki Online
kalkionline.com