நடுத்தர மக்களுக்கு டபுள் ஜாக்பாட்: சிலிண்டர் விலையைத் தொடர்ந்து தங்கம் விலையிலும் திடீர் வீழ்ச்சி!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்
Gold Price Updates
Updated on

தங்கத்தின் விலையானது ரூ.1 லட்சத்தைக் கடந்திருந்தாலும், அதற்குப் பிறகு பெரிய அளவில் உயர்வை சந்திக்கவில்லை. சற்று விலை ஏறினாலும், உடனே குறைந்து விடுகிறது. கடந்த வருடத்தின் பிற்பாதியில் தான் தங்கத்தின் விலை அதிகபட்ச உயர்வை எதிர்கொண்டது.

இதனைக் கருத்தில் கொண்டே இந்த ஆண்டும் விலை அதிகமாக உயரும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் இதற்கு நேர்மாறாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்துள்ளது.

கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது. ஆனால் அதற்கு முன்னதாக ரூ.1,720 வரை சரிந்திருந்தது. நேற்று (ஜூலை 31) தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. இதன்படி ஒரு சவரன் ரூ.1,06,040-க்கு விற்பனையானது. கடந்த 4 நாட்களாகவே வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 1) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்து, ரூ.1,05,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது.

உலகளாவிய போர் காரணமாக பொருளாதார சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதால், பெரு முதலீட்டாளர்கள் பலரும் தங்க முதலீட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் தற்போது வரை தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும் கூட, ஆண்டின் முடிவில் விலை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
​ETF-களை நம்பி முதலீடு செய்யலாமா.? ராபர்ட் கியோசாகியின் திடீர் எச்சரிக்கை.!
தங்கம் விலை நிலவரம்

கடந்த மாதம் 2026 ஜூலை 1-ல்:

தங்கத்தின் விலை: 1 கிராம் - ரூ.13,100 1 சவரன் ரூ.1,04,800

வெள்ளியின் விலை: 1 கிராம் - ரூ.245

கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 1-ல்:

தங்கத்தின் விலை: 1 கிராம் - ரூ.9,150 1 சவரன் ரூ.73,200

வெள்ளியின் விலை: 1 கிராம் - ரூ.123

மேற்கண்ட தகவல்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்த விலை நிலவரத்திற்கும், தற்போதைய விலைக்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனால் கடந்த ஓராண்டிற்கு முந்தைய விலை நிலவரங்களை ஒப்பிட்டால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தினாலும், மேலும் உயரும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.

இதனால் தான் தங்க முதலீட்டை இன்றும் ஊக்குவித்து வருகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் தங்க சேமிப்புத் திட்டத்தில் சிறுக சிறுக சேமிக்கலாம். பலருக்கும் இன்று சம்பள தேதி என்பதால், முதலீட்டில் சற்றேனும் கவனம் செலுத்தலாம்.

gold price
gold
இதையும் படியுங்கள்:
இனி மாரடைப்பு பயமே வேண்டாம்..! வீட்டின் டாய்லெட் சீட்டே இனி உங்களை எச்சரிக்கும்!
தங்கம் விலை நிலவரம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com