ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் புதிய விதிகள்.. பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள்!

தட்கல் டிக்கெட், வருமான வரி தாக்கல், எல்.பி.ஜி சிலிண்டர் விலை மற்றும் CKYC 2.0: பொதுமக்களுக்கான அத்தியாவசிய தகவல்கள்!
ஆகஸ்ட் 1 புதிய விதிமுறைகள்
ஆகஸ்ட் 1 புதிய விதிமுறைகள்AI image
Updated on

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சில அரசு மற்றும் நிதி தொடர்பான விதிமுறைகள் மாறுவது வழக்கம்.. அதன்படி ஆகஸ்ட் 1 முதல் ரயில்வே, வருமான வரி,எல்.பி.ஜி..விலை, வங்கி சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளன..இவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையையும் செலவுத் திட்டத்தையும் நேரடியாக பாதிக்கக்கூடியவை..

1. தட்கல் டிக்கெட் முன்பதிவு மாற்றம் (Railway Tatkal)

முன் பதிவு மையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க புதிய டோக்கன் முறை அறிமுகப்படுத்தப் படுகிறது.

டோக்கன் வழங்கும் நேரம் தத்கல் முன்பதிவு தொடங்கும் நேரத்துடன் ஒத்திசைக்கப்படுகிறது.. இதனால் தேவையற்ற காத்திருப்பு குறையும் என ரயில்வே எதிர்பார்க்கிறது.

முதற்கட்டமாக மேற்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய நடைமுறை, வெற்றிகரமாக செயல்படுவதை பொறுத்து, படிப்படியாக நாடு முழுவதும் உள்ள பிற 18 ரெயில்வே மண்டலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2. வருமான வரித் தாக்கல் (Income Tax Return - ITR)

ஜூலை 31க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் ஆகஸ்ட் 1 முதல் தாமத கட்டணம் மற்றும் பிற விதிகளுக்கு உட்படலாம்..

3. சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலை

LPGசிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி எண்ணெய் நிறுவனங்கள் LPG ஆலையை மறுஆய்வு செய்கின்றன.. ஆகஸ்ட் 1 லும் புதிய விலை அறிவிக்கப்படலாம்.விலை உயருமா குறையுமா என்பது அன்றைய அறிவிப்பைப் பொறுத்தது..

4..சி.கே.ஒய்.சி 2.0 (CKYC 2.0 Implementation)

ஆதாருடன் இணைக்கப்பட்ட CKYC 2.,0. நடைமுறை படிப்படியாக அறிமுகமாகிறது.. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் KYC செயல்முறை எளிமையாக்கப்படுவது இதன் நோக்கம்..

5.. கிரெடிட் கார்டு விதிகள் (Credit Card Rules)

சில வங்கிகள் ரிவார்டு பாயிண்ட்கள்,தாமதக்கட்டணம் , சேவைக் கட்டணங்களில் மாற்றங்களை அறிவிக்கலாம்.. எந்த மாற்றமும் இருந்தால் அந்தந்த வங்கியின் அதிகாரப் பூர்வ அறிவிப்பைப் பார்க்க வேண்டும்..

மாற்றங்களை முன் கூட்டியே தெரிந்து கொள்வது ஏன் அவசியம்?

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சில அரசு மற்றும் நிதி நிறுவனங்களின் விதிமுறைகள் புதுப்பிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.. அவற்றில் சில மாற்றங்கள் சிறியதாக தோன்றினாலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்..

குறிப்பாக வங்கி சேவைகளை அடிக்கடி பயன்படுத்துபவர்கள், சமையல் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தும் குடும்பங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்யும் ஊழியர்கள் ஆகியோர் புதிய அறிவிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும்..

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படிக்காமல் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை மட்டும் நம்புவது சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்..எனவே சம்பந்தப்பட்ட துறைகளின் இணைய தளம் அல்லது அதிகாரப் பூர்வ அறிவுப்புகளைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.. புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு அவசரமாக தகவல்களை தேடுவதை விட முன் கூட்டியே தெரிந்து கொள்வது நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும்..

மேலும் குடும்பத்தின் மாதாந்திர செலவு திட்டத்தை தயாரிக்கும் போதும் இது போன்ற மாற்றங்கள் உதவிகரமாக இருக்கும்.. எரிவாயு விலை மாற்றம், வங்கி சேவைக் கட்டணங்கள் அல்லது பயண விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை முன்பே அறிந்திருந்தால் அதற்கேற்ப திட்டமிட முடியும்.. அதனால் தேவையற்ற சிரமங்களையும் கூடுதல் செலவுகளையும் தவிர்க்கலாம்.. விழிப்புணர்வுடன் செயல் படுவது தான் எந்த புதிய விதிமுறைகளையும் எளிதாக ஏற்றுக் கொள்வதற்கான சிறந்த வழியாகும்..

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் இந்த மாற்றங்கள் பயணம், வங்கி சேவைகள் வருமான வரி மற்றும் குடும்பச் செலவுகள் உள்ளிட்ட பல அம்சங்களை தொடருகின்றன..எனவே பொதுமக்கள் தங்களுக்கு தொடர்புடைய விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்..

புதிய விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வுடன் செயல்படுவது தேவையற்ற குழப்பங்களையும் கூடுதல் செலவுகளையும் தவிர்க்க உதவும்..எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அவ்வப்போது கவனித்து அதற்கேற்ப திட்டமிடுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்..

விழிப்புணர்வுடன் செயல்பட்டால் புதிய மாற்றங்களை எளிதாக எதிர் கொண்டு பயனடைய முடியும்!!!

இதையும் படியுங்கள்:
பயணிகளுக்கு குட் நியூஸ்..!ஆகஸ்ட் 1 முதல் ‘தட்கல்’ டிக்கெட் விதிகளில் வரப்போகும் அதிரடி மாற்றம்..!!
ஆகஸ்ட் 1 புதிய விதிமுறைகள்
இதையும் படியுங்கள்:
60 வயசு ஆயிடுச்சா? உடனே இந்த முதியோர் அட்டை வாங்குங்க... மிஸ் பண்ணிடாதீங்க!
ஆகஸ்ட் 1 புதிய விதிமுறைகள்
logo
Kalki Online
kalkionline.com