

உலகப் பொருளாதார சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலை தினமும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததைத் தொடர்ந்து, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்தன. இதன் காரணமாக கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.
நடப்பாண்டிலும் விலை உயரும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக தங்கத்தின் விலை ஓரளவு சரிந்தது. இருப்பினும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.5,960 உயர்ந்தது. இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று காலை ரூ.2,400 உயர்ந்தது. கடந்த 10 நாட்களைப் பொறுத்த வரை தங்கத்தின் விலை ஏற்றத்தை நோக்கியே பயணித்தது.
நேற்றைய நிலவரம்:
நேற்று (ஆகஸ்ட் 11) காலையில் உயர்ந்த தங்கம், மாலையில் ரூ.800 வரை சரிந்தது. இந்த சரிவு ஆறுதல் அளித்தாலும், நேற்று ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக ரூ.1,600 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில், மாலையில் மாற்றமின்றி விற்பனையானது.
நேற்று (ஆகஸ்ட் 11) ஒரு கிராம் தங்கம் ரூ.14,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனையானது
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் மாற்றப்படாதது, உலக சந்தையில் தங்கத்தின் விலையை உயர்த்தியுள்ளது. மேலும் அமெரிக்கா தற்போது உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மீண்டும் டாலரை பலப்படுத்தும் முயற்சியிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏறும் என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாதத்திலாவது தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழே வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான் மிச்சம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே விலை உயர்ந்து வருகிறது.
இன்றைய நிலவரம்:
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 12) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,13,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 11: 1 கிராம் - ரூ.14,150 1 சவரன் ரூ.1,13,200
ஆகஸ்ட் 10: 1 கிராம் - ரூ.13,950 1 சவரன் ரூ.1,11,600
ஆகஸ்ட் 9: 1 கிராம் - ரூ.13,965 1 சவரன் ரூ.1,11,720
ஆகஸ்ட் 8: 1 கிராம் - ரூ.13,965 1 சவரன் ரூ.1,11,720
ஆகஸ்ட் 7: 1 கிராம் - ரூ.13,900 1 சவரன் ரூ.1,11,200
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 11: 1 கிராம் - ரூ.260
ஆகஸ்ட் 10: 1 கிராம் - ரூ.250
ஆகஸ்ட் 9: 1 கிராம் - ரூ.250
ஆகஸ்ட் 8: 1 கிராம் - ரூ.250
ஆகஸ்ட் 7: 1 கிராம் - ரூ.250
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட இந்த திடீர் விலை உயர்வு தொடருமா அல்லது மீண்டும் சரியுமா என்பதே சாமானியர்களின் கேள்வியாக உள்ளது. ஆடி மாதம் முடிந்த பிறகு திருமண விழாக்கள் நடைபெறும் என்பதால், இந்தியாவில் தங்கத்தின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தங்கத்தின் அதிகப்படியான விலை உயர்வால் தான், சந்தையில் தங்க முதலீட்டுக்கு நல்ல மவுசு இருக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.