

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்தே விலை உயர்ந்து வரும் தங்கம் கடந்த வாரத்தில் ரூ.2,000-க்கும் உயர்ந்தது. இந்த வாரத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.560 உயர்ந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் மற்றும் அமெரிக்கா - ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்றே கூறப்படுகிறது.
உலகளாவில் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இம்மாத இறுதி வரை விலை உயர்வு தொடரும் என வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (ஆகஸ்ட் 18) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்:
தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 19) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.680 குறைந்து, ரூ.1,13,640-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.85 குறைந்து ரூ.14,205-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.250-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்து வருவதைப் பார்த்தால், தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குவதற்கு அரசு சார்பில் தனி பட்ஜெட்டே போட வேண்டியிருக்கும் போலிருக்கிறது. ஒருவேளை சலுகை விலையில் தங்கம் வாங்க அரசு மானியம் வழங்கினால், இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.
இருப்பினும் தமிழக முதல்வர் விஜய், தாய்மாமன் சீர் திட்டத்தின் மூலம் திருமணமாகும் பெண்களுக்கு 1 சவரன் தங்கம் வழங்கும் திட்டத்தை தொடங்க இருக்கிறார். கல்வித் தகுதிக்கு ஏற்ப திருமணமாகும் பெண்களுக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் அமலில் இருந்தது.
ஆனால் கடந்த ஆட்சியில் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகமாக இருப்பது, பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.14,290 1 சவரன் ரூ.1,14,320
ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.14,270 1 சவரன் ரூ.1,14,160
ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760
ஆகஸ்ட் 15: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760
ஆகஸ்ட் 14: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 15: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 14: 1 கிராம் - ரூ.255
தங்கத்தின் தொடர் விலை உயர்வு, முதலீட்டாளர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சாதாரண மக்களுக்கு இந்த விலையேற்றம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் இனி உறவினர்களின் விஷேசங்களுக்கு தங்கத்தை மொய் வைக்கும் கலாச்சாரம் மெல்ல மெல்ல அழிந்து விடும்.
தங்க முதலீட்டை முன்னெடுக்க சாதாரண மக்கள் முன்வர வேண்டியது அவசியம். இல்லையெனில் விலையேற்றத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.