மீண்டும் அதிர்ச்சி.!! ஒரே வாரத்தில் ரூ.5,440 உயர்வு.! புதிய உச்சத்தில் தங்கம் விலை.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold rate
Updated on

தங்கத்தின் விலை கடந்த 2 மாதங்களாக குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. கூறிப்பாக இந்த வாரத்தில் மட்டும் ரூ.4,640 உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் காலை மற்றும் மாலை என இருமுறை தங்கம் விலை உயர்ந்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று (ஆகஸ்ட் 21) காலையில் தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.1,120 உயர்ந்தது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று தங்கத்தின் விலை ரூ.2,000 உயர்ந்தது. வெள்ளியின் விலையும் காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்த நிலையில், மாலையிலும் ரூ.5 உயர்ந்தது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (ஆகஸ்ட் 20) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ரூ.14,850-க்கும், ஒரு சவரன் ரூ.2,000 உயர்ந்து ரூ.1,18,800-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.270-க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 22) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து, ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.14,950-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், அதிகம் கவலையுறுவது சாமானிய மக்கள் தான். இருப்பினும் மாதந்தோறும் ஒரு சிறு தொகையை சேமிப்பதன் மூலம் தங்கம் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும். இல்லையெனில் விலை ஏற ஏற கவலை தான் அதிகரிக்கும்.

மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீடாக தங்கம் இருப்பதால், அதன் மீதான முதலீடுகளும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. டாலர் மீதான முதலீடுகள் குறைந்த நிலையில், தங்கத்தின் மீதே பெரு முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய முடியவில்லை என்றாலும், வெள்ளியில் முதலீடு செய்வது வருங்காலத்தில் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறப்பான நிதி திட்டமிடலை மேற்கொள்வது எப்படி?
தங்கம் விலை
 தங்கம் விலை
Gold price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஆகஸ்ட் 21: 1 கிராம் - ரூ.14,850 1 சவரன் ரூ.1,18,800

ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.14,600 1 சவரன் ரூ.1,16,800

ஆகஸ்ட் 19: 1 கிராம் - ரூ.14,400 1 சவரன் ரூ.1,15,200

ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.14,290 1 சவரன் ரூ.1,14,320

ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.14,270 1 சவரன் ரூ.1,14,160

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஆகஸ்ட் 21: 1 கிராம் - ரூ.270

ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 19: 1 கிராம் - ரூ.250

ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.255

ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.255

கடந்த 5 நாட்கள் விலையை ஒப்பிட்டுப் பார்த்தாலே தங்கம் மற்றும் வெள்ளி விலையின் ஏற்றத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். கடந்த ஆண்டுடன் இன்றைய விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், அப்போதே தங்கத்தை வாங்கியிருக்கலாமே என்ற எண்ணம் தான் வரும்.

ஏனெனில் கடந்த ஆண்டு இதே தேதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.73,720-க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.128-க்கும் விற்பனையானது. இதில் தங்கத்தின் விலை 50%-க்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இரு மடங்கைக் காட்டிலும் அதககம்.

இதையும் படியுங்கள்:
நிதி நிர்வாகத்தில் சிறுவர்கள் - சிறந்து விளங்க 3 முக்கிய பண மொழிகள்
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com