

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.5,840 உயர்ந்தது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை ரூ.640 உயர்ந்த தங்கம் விலை, அடுத்த நாளே ரூ.160 குறைந்தது.
இந்நிலையில் நேற்று தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையானது. இந்த வாரத்தில் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் அடுத்தடுத்த நாட்களில் விலை குறைய வாய்ப்பிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் உலகளாவிய சந்தை நிலவரங்களும் இதற்கு சாதகமாக இருக்க வேண்டும்.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (ஆகஸ்ட் 26) தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.265-க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்:
தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 27) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 குறைந்து, ரூ.1,19,520-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.14,940-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று (ஆகஸ்ட் 26) நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், உலகளாவிய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் தற்போதைய சூழலில் முதலீடு செய்வது தான் நல்ல யுக்தி.
இருப்பினும் தங்கத்தை ஆபரண நகையாக வாங்க நினைப்பவர்கள், விலை குறையும் என காலம் தாழ்த்துவதும் குறைவு. ஏனென்றால் எப்போது விலை உயரும், குறையும் என்பதை பெரும்பாலும் யராலும் சரியாக சொல்ல முடியாது. கணிப்புகளை மட்டும் தான் வெளியிட முடியும்.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080
ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080
ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.15,030 1 சவரன் ரூ.1,20,240
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
ஆகஸ்ட் 22: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.265
ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.265
ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.275
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.270
ஆகஸ்ட் 22: 1 கிராம் - ரூ.270
கடந்த ஆண்டு இதே தேதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.75,120-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.130-க்கு விற்பனையானது. இன்றைய விலையுடன் கடந்த ஆண்டு விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை யாருமே கணிக்காத வகையில் ஏற்றத்தைக் கண்டுள்ளது.
அடுத்த வருடம் இதே தேதியில் தங்கத்தின் விலை நிச்சயமாக ஏற்றம் கண்டிருக்கும். தங்கத்தின் விலையைத் தொடர்ந்து கவனித்து வரும் சாமானிய மனிதர்கள் கூட அடுத்த வருடம் விலை உயர்ந்து விடும் என்பது புரிந்திருக்கும்.
கடந்த ஆண்டே தங்கத்தை வாங்கியிருக்கலாம் என இப்போது கவலைப்படுவதைப் போல, அடுத்த ஆண்டும் கவலைப்படாமல் இருக்க வேண்டுமெனில் சிந்தித்து முடிவெடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.