

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்த நிலையில், ஒட்டுமொத்தமாக சவரனுக்கு ரூ.640 மட்டுமே குறைந்தது. கடந்த வாரத் தொடக்கத்தில் மட்டுமே வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்தது. ஆனால் அதற்குப் பின் 6 நாட்களாக வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.235-க்கு விற்பனையானது.
தங்கம் மற்றும் வெள்ளியில் ஏற்படும் இந்த திடீர் ஏற்ற இறக்கங்கள், ஒட்டுமொத்த விலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தங்கம் விலையில் கணிசமான மாற்றம் இருக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு.
நேற்று (ஆகஸ்ட் 02) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனையானது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர், மீண்டும் சமாதானப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஆடிப் பெருக்கான இன்று (ஆகஸட் 3) தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ரூ.1,06,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது.
உலகளாவிய சந்தை நிலவரங்கள், போர் மற்றும் டாலரின் எழுச்சியால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அளவிற்கு குறையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கு தினமான இன்று, தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடியான மாற்றம், பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 2: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760
ஆகஸ்ட் 1: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760
ஜூலை 31: 1 கிராம் - ரூ.13,255 1 சவரன் ரூ.1,06,040
ஜூலை 30: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840
ஜூலை 29: 1 கிராம் - ரூ.13,155 1 சவரன் ரூ.1,05,240
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 2: 1 கிராம் - ரூ.235
ஆகஸ்ட் 1: 1 கிராம் - ரூ.235
ஜூலை 31: 1 கிராம் - ரூ.235
ஜூலை 30: 1 கிராம் - ரூ.235
ஜூலை 29: 1 கிராம் - ரூ.235
தங்கத்தின் விலை குறைந்தாலும், அதன் மீதான முதலீடுகள் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. உலக சந்தையில் தங்க முதலீடு அதிகரிக்கும் பட்சத்தில் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை. பாதுகாப்பான முதலீடாக தங்க முதலீடு இருப்பதால், சாமானியர்களும் இதில் கவனம் செலுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.