ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு எங்கிருந்து பேருந்துகள்..!

தீபாவளி, ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு
சிறப்பு பேருந்துகள்
சிறப்பு பேருந்துகள்
Updated on: 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.சென்னையில் நாள்தோறும் வெளி மாவட்டங்களுக்கு 2,190 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகளுடன், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி 6,199 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 17ஆம் தேதி முதல் தொடர் விடுமுறையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

19-ம் தேதி( திங்கட்கிழமை) ஆயுதபூஜை, 20-ம் தேதி( செவ்வாய்க்கிழமை) விஜயதசமியையொட்டி அரசு விடுமுறை நாட்கள் ஆகும். அதற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் வருகிறது. இந்த தொடர் விடுமுறைகளை பயன்படுத்தி சிலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு கூடுதலாக 6,199 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும்.

நாளை (15-ம் தேதி) முதல் 18-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 9.086 சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 15,659 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சிறப்பு பேருந்துகள்
சிறப்பு பேருந்துகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் :

புதுச்சேரி, சிதம்பரம், கடலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

சிஎம்டிஏ காலனி பூங்கா அருகே கிளாம்பாக்கம் :

வந்தவாசி, வேலூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் :

கும்பகோணம், தஞ்சாவூர், நாகை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்; மொத்தமாக 106 பேருந்துகள் அங்கிருந்து இயக்கு திட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம் செல்வதற்கு 45 இலவச மாநகர பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம் :

கிழக்கு கடற்கரைச் சாலை, வேலூர், பெங்களூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் d

மாதவரம் புதிய பேருந்து நிலையம் :

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்

அரசு பஸ் மற்றும் மினி பஸ்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம். பஸ்களில் பட்டாசு உட்பட வெடிபொருட்களை கொண்டுச் செல்ல அனுமதிக்கக்கூடாது. மீறி யாரேனும் பட்டாசுகளை எடுத்துச் சென்றால், அவை பறிமுதல் செய்யப்படும்.

தீபாவளி பண்டிகை என்பதால், பொதுமக்கள் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்களில் பட்டாசு உட்பட வெடிபொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.

பயணிகளுக்கு தெரியாமல் எடுத்துச் சென்றாலும், டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அனுமதிக்கக்கூடாது. வாகன தணிக்கையின் போது, பட்டாசு கொண்டுச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பயணிகள் மட்டுமின்றி ஓட்டுநர், நடத்துனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு 15,659 சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த தேதிகளில் இயங்கும் தெரியுமா? உடனே நோட் பண்ணுங்க.!
சிறப்பு பேருந்துகள்
logo
Kalki Online
kalkionline.com