தீபாவளிக்கு 15,659 சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த தேதிகளில் இயங்கும் தெரியுமா? உடனே நோட் பண்ணுங்க.!

சொந்த ஊர் பயணத்தை எளிதாக்க ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி சிறப்பு பேருந்து
Diwali Special Buses
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

பண்டிகை காலம் வந்துவிட்டால், சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பது வழக்கம். அடுத்த மாதம் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து 15,659 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு ஊருக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், தற்போது சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயிலில் டிக்கெட் கிடைக்காதவர்கள் தமிழக அரசின் சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊருக்குச் செல்வார்கள்.

மேலும் பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போதும் தமிழ்நாடு போக்குவரத்து துறை தனியார் பேருந்து கட்டணக் கொள்ளையைத் தடுக்க அதிரடியான நடவடிக்கையை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி கரண்ட் கட்டே இருக்காது.! ரூ.35-க்கு முடிந்த மெகா டீல்: தமிழக அரசு இறக்கிய மெகா அஸ்திரம்.!
தீபாவளி சிறப்பு பேருந்து

போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வெளியிட்ட அறிக்கையில், “நவம்பர் 19-ம் தேதி ஆயுத பூஜை மற்றும் 20-ம் தேதி விஜயதசமி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த 2 நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருநதுகளுடன் கூடுதலாக 6,199 பேருந்துகள் இயக்கப்படும். அடுத்து வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5 முதல் 8-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பண்டிகை நேரத்தித் தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்உ மாவட்ட மக்களும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் நாள்தோறும் வெளி மாவட்டங்களுக்கு 2,190 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகளுடன், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பண்டிகை நாட்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி நெருங்க நெருங்க தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையின் போது ஊருக்கு செல்லும் பயணிகள், பேருந்தில் பட்டாசுகளை எடுத்துச் செல்லக் கூடாது

இதையும் படியுங்கள்:
2 நாட்களில் ரூ.1,560 சரிவு.! தாறுமாறாக சரியும் தங்கம் விலை.!
தீபாவளி சிறப்பு பேருந்து

வழக்கமான மற்றும் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான இருக்கைகளை TNSTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் TNSTC மொபைல் செயலியின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் உள்ளிட்ட பேருந்து முனையங்களுக்கு செல்வதற்கு, மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் 24 மணி நேரமும் சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பண்டிகை நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி கஷ்டப்படாமல், டிக்கெட் தட்டுப்பாடு இன்றி பயணிக்க உடனே முன்பதிவு செய்யுங்கள். குடும்பத்துடன் சரியான நேரத்தில் பாதுகாப்பாகவும், குறைந்த செலவிலும் சொந்த ஊருக்குப் பயணிக்க முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com