

அரசாங்கம் உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்திற்கும் இந்த ஒரு கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரைக்கும் வருடத்திற்கு Medical Health insurance கொடுக்கபடுகிறது. ஆனால் யாரும் இந்த கார்ட்டை பயன்படுத்துவதில்லை.
ஆரோக்கிய யோஜனா என்பது பெரும்பாலும் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டு திட்டம் (PMJAY Scheme) என்ற பெயரில் அறியப்படும், மத்திய அரசின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும்.
ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்(Ayushman Bharat Yojana – PMJAY) திட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கிட்டதட்ட ரூ.5 லட்சம் வரைக்கும் Medical Health insurance கொடுத்து வருகிறார்கள். ஒரு சில குடும்பத்திற்கு இதில் வயது வரம்பு கிடையாது. குடும்பத்தில் இத்தனை பேருக்கு தான், இவ்வளவு தான் என்ற வரம்பும் கிடையாது. முற்றிலும் இலவசம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் பிரீமியமும் கட்டவேண்டிய அவசியமில்லை.
கிட்டதட்ட 28000ம் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நீங்கள் இந்த கார்டை காண்பித்து சரிபார்ப்பு முடிந்த பின்னர் 100 சதவீதம் இலசவமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
1,700க்கு மேற்பட்ட சிகிச்சைகள், Heart treatment, kidney dialysis, cancer care, accident, ICU charges,medicine, scan மட்டுமின்றி C-Section delivery செய்தாலும் அது உங்களுக்கு 100 சதவீதம் முற்றிலும் பணமில்லா சிகிச்சையில்(cashless) அடங்கி விடும்.
முக்கியமான விஷயம் இந்த கார்டை வாங்குவதற்கு முன்பு உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தாலும் அதையும் நீங்க இந்த கார்டின் மூலம் இலவசமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
கூடுதல் சலுகைகள் என்னவென்றால் நீங்க மருத்துவமனையில் அட்மிட்டாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு என்னென்ன கட்டணம் இருக்கிறதோ அதுவும் இதில் அடங்கும்.
அட்மிட்டாகி விட்டு நீங்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது post discharge charges அடுத்த 15 நாட்களுக்கான ஸ்கேன், மருந்துகள் என அனைத்தும் இந்த கார்ட்டில் மூலம் இலவசமாக பெற முடியும்.
இந்தியாவில் எந்த கார்டை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் உபயோகித்து கொள்ளலாம்.
பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான தகுதி வரம்புகள் என்னென்ன?
இந்தியாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பொருளாதாரரீதியாக பின்தங்கிய குடும்பத்தினர்.
ரேஷன் கார்டில் உங்களுடைய பெயர் இருந்தால் மட்டுமே இத்திட்டத்தின் பலனை பெற முடியும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
இரு சக்கர, மூன்று சக்கர வாகனம் அல்லது கார் சொந்தமாக வைத்திருப்பவர்கள்,
அரசு ஊழியர்கள்,
மாத வருமானம் ரூ.10,000க்கு மேல் உள்ளவர்கள்
சொந்த வீடு வைத்திருப்பவர்கள்,
5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள்,
தேவையான ஆவணங்கள்
ரேஷன் கார்டு
குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டை
பான் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
வங்கி கணக்கு விவரங்கள்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
விண்ணப்பிக்கும் முறை
அருகில் உள்ள இசேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://www.pmjay.gov.in/ இணையதளத்திற்கு சென்று விண்ணப்படிவதை பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்தவுடன் ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். பின்னர், உங்களுடைய விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்ப்பார்த்த பிறகு 10 முதல் 15 நாட்களுக்குள், ஆயுஷ்மான் பாரத் கோல்டன் கார்டு வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் நோக்கம், பணமின்மையால் மருத்துவ சிகிச்சையைத் தவிர்க்கும் ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களை பாதுகாத்து, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு உதவுகிறது.