நிஜமாகிறதா பாபா வாங்காவின் கணிப்பு? 2026-ல் வெடிக்கிறதா 3-ம் உலகப்போர்..?

கடந்தாண்டை போலவே 2026-ம் ஆண்டிலும் மார்ச் முதல் ஏப்ரலுக்குள் ஒரு பெரும் உலகப்போர் தொடங்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.
world war 3 baba vanga predictions
world war 3 baba vanga predictions
Published on

2026-ம் ஆண்டில் இவையெல்லாம் நடக்கும் என்று பாபா வாங்காவின் கணிப்புகள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன. அதாவது, இந்தாண்டு (2026) போர் நிகழும் என்று பாபா வாங்கா முன்பே கணித்ததாக கூறப்படும் நிலையில், அவரின் கணிப்பு தற்போது நிஜமாகி விடுமோ என்ற பயம் மக்களிடையே எழுந்துள்ளது.

உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் அவற்றில் பாபா வாங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல அவரது கணிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை. 1996ம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்துவிட்ட போதிலும், எதிர்காலம் குறித்த இவரது கணிப்புகள் இன்று வரை தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் பாபா வங்கா இறப்பதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.

அமெரிக்காவில் 9/11 தாக்குதல்கள், உயிரி ஆயுதங்களால் உலக அழிவு மற்றும் கோவிட் தொற்றுநோய் பரவல் போன்ற பல விஷயங்களை பாபா வாங்கா சரியாக கணித்து கூறியுள்ளார். இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. ஒட்டுமொத்த உலகத்துக்கே ஜாதகம் எழுதி வைத்து விட்டு சென்ற பாபா வாங்கா, கடந்தாண்டு (2025) அவர் கணித்த உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், இந்தியா-பாகிஸ்தான் போர், மியான்மர் உள்நாட்டு கலவரம் போன்றே பல கணிப்புகள் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பாபா வங்கா கணித்த 2026 பேரழிவு உண்மையா? பூமியின் கடைசி புத்தாண்டு எது?
world war 3 baba vanga predictions

அந்த வகையில், கடந்தாண்டை போலவே 2026-ம் ஆண்டிலும் மார்ச் முதல் ஏப்ரலுக்குள் ஒரு பெரும் உலகப்போர் தொடங்கும் என கணித்துள்ள பாபா வாங்கா, அந்த போரில் முக்கிய வல்லரசு நாடுகள் ஈடுபடும் என்றும் உலகெங்கும் உள்ள கண்டங்களில் இந்த போர் பதற்றம் பரவும் எனவும் கணித்துள்ளார்.

அவர் கணித்தது போலவே, கடந்த பிப்ரவரி 28-ம்தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதையடுத்து, போர் தீவிரமடைந்தது கிட்டத்தட்ட 16 நாட்களாக நீடித்து வரும் நிலையில் இந்தியா அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்த போரால் இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், ஏற்றுமதி வர்த்தகம் முழுமையாக முடங்கியுள்ளது. இந்த போர் முடிவுக்கு வந்தால் தான் இந்தியாவில் பிரச்சனைகள் சரியாகும் என்று தெரிகிறது. அதேசமயம், போர் விரைவில் முடிவுக்கு வராதபட்சத்தில் இந்தியாவில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளார்.

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போரில் கமேனி கொல்லப்பட்டதால் ஈரான் அதற்கு பழி வாங்கும் எண்ணத்தில் கொலைவெறியில் உங்களுக்கு நானும் சளைத்தவர்கள் அல்ல என்று பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியே நீயா நானா என்ற போட்டியில் நீண்டு கொண்டே போனால் இந்த போர் முடிவுக்கு வருமா அல்லது 3-ம் உலகபோருக்கு வழிவகுக்குமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் பதட்டங்கள் மோசமடைந்தால் ஒரு பெரிய உலகப் போர் தொடங்கக்கூடும் என்று பாபா வாங்கா எச்சரித்ததாக கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாபா வாங்காவின் 2026-ம் ஆண்டு கணிப்பின்படி, மார்ச்-ஏப்ரல் ஒரு பயங்கரமான போர் நடக்கக்கூடும் என்றும் இதில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற இரண்டு சக்திவாய்ந்த நாடுகள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

இந்தப் போரினால், உலகின் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். இந்த போர் தொடங்கினால், ஐரோப்பாவின் நிலம் அழிக்கப்படும். அது தரிசாகிவிடும். ரஷ்யா ஒரு வல்லரசாக உருவாகும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

அவர் கணித்தது போன்றே தற்போது அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கி, தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் நாட்களில் இது 3-ம் உலகபோருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் இந்தியா எந்த அளவிற்கு பாதிப்பை சந்திக்க போகிறது என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

தற்போதே இந்தியாவில் சிலிண்டர், பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அதனால் உள்நாட்டு தொழில்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி வர்த்தகமும் முழுமையாக முடங்கியுள்ள நிலையில், போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே நிலைமை சீராகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
முற்றும் இஸ்ரேல் - ஈரான் போர்: ரூ.200-க்கு செல்லப்போகும் பெட்ரோல் விலை..!
world war 3 baba vanga predictions

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போருக்கு இன்னும் தெளிவான முடிவு தெரியவில்லை. இதற்கிடையே உலக நாடுகளுக்குள் நடக்கும் எல்லைப் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலும் மக்கள் உண்மையான கணிப்புகளை விட, மூன்றாம் உலகப் போர் பற்றிய பாபா வாங்காவின் கூறப்படும் கணிப்புக்குத்தான் அதிக பயப்படுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com