
உலகில் வேற்று கிரகவாசிகள் மற்றும் ஏலியன்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் சூரியனை நோக்கி ஒரு மர்மமான விண்பொருள் அதிவேகத்தில் வருவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். உண்மையில் சூரியனை நோக்கி வருவது ஏலியன் தானா அல்லது வேறொரு விண்பொருளா என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும் விஞ்ஞானிகளின் இந்த எச்சரிக்கை, பாபா வங்காவின் கணிப்பை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
2025 இல் மனித குலம் வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பு கொள்ள நேரிடும் என மறைந்த பல்கேரிய ஆன்மீகவாதியான பாபா வங்கா கணித்திருந்தார். இந்நிலையில் சூரியனை நோக்கி வரும் விண்பொருள் தற்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு வானியல் ஆராய்ச்சியாளர்கள் 3I/ATLAS எனப் பெயர் வைத்துள்ளனர்.
சூரியனை நோக்கி வரும் மர்மமான விண்பொருளை ஜூலை 1 அன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் அகலம் 15 மைல். இது மணிக்கு 1.3 இலட்சம் மைல் வேகத்தில் பயணிக்கிறதாம். மேலும் சூரிய குடும்பத்திற்கு வெளியில் தான் இது உருவானதாக நம்பப்படுகிறது.
இது ஒரு வால் நட்சத்திரமாக இருக்கலாம் என தொடக்க கால ஆராய்ச்சிகள் தெரிவித்தன. ஆனால் ஹார்வர்ட் வானியற்பியல் விஞ்ஞானி அவி லோப், வேற்று கிரகவாசிகளிகளின் தொழில்நுட்ப கலைப் பொருளாக இருக்கக் கூடும் என அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
செப்டம்பர் மாதம் வரை பூமியில் இருந்து 3I/ATLAS என்ற மர்மமான விண்பொருளைத் தெளிவாக காண முடியும். இது நவம்பர் மாதத்தில் சூரியனின் பெரிஹெலியன் என்ற புள்ளியை நெருங்கி விடும் என்பதால், அந்த சமயத்தில் இதனைக் காண முடியாது. மேலும் சூரியனைக் கடந்து விட்டால் மீண்டும் டிசம்பர் மாதத்தில் பூமியில் இருந்து பார்க்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த வானியல் நிகழ்வு வேற்று கிரகவாசிகளின் தொழில்நுட்ப செயல்பாடு தான் என விஞ்ஞானி அவி லோப் உறுதிபட நம்புகிறார்.
3I/ATLAS விண்பொருள் 700 கோடி ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படுகிறது. அப்படியெனில் இது சூரியனைக் காட்டிலும் 300 கோடி ஆண்டுகள் பழமையானது எனக் தெரிகிறது. பூமியை அழிக்கும் விரோத நோக்கம், வேற்று கிரகவாசிகளிடம் இல்லை என்ற உறுதியான ஆதாரங்கள் விஞ்ஞானிகளிடம் இல்லை. ஒருவேளை வேற்று கிரகவாசிகளை மனித இனம் எதிர்கொள்ள வேண்டியிருந்தால், கடுமையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அவசியம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு தான் தற்போது உலகளவில் பேசுபொருளாகி, விஞ்ஞான உலகை அதிரச் செய்துள்ளது. 3I/ATLAS விண்பொருளைத் தற்போது விஞ்ஞானிகள் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. சூரியனை நெருங்குவதற்குள் இது தொடர்பான பல கண்டுபிடிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.