"வங்கியில் வேலை பார்க்க ஆசையா?" – 1,100 காலியிடங்கள்... ₹1.20 லட்சம் வரை சம்பளம்!

BOB வங்கியில் 1,100 காலியிடங்கள்! மாதச் சம்பளம் ₹1.20 லட்சம் வரை! உடனே அப்ளை பண்ணுங்க!
Bank job
Bank job
Updated on: 

முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda - BOB) காலியாக உள்ள 1,100 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்களின் விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி:

  1. வெல்த் எக்ஸிகியூட்டிவ் (Wealth Executive - JMG/S-I):

    • காலியிடங்கள்: 1,000

    • சம்பளம்: ₹48,480 முதல் ₹1,20,940 வரை

    • கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Any Degree) மற்றும் IC 38 / NISM V-A / NISM XXI-A / NISM V-D சான்றிதழ்கள். MBA (Finance/ Marketing/ Banking) பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    • அனுபவம்: வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 'Wealth Product Sales' பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

    • வயது வரம்பு: 22 முதல் 32 வயது வரை.

கிரெடிட் அனலிஸ்ட் (Credit Analyst - MMG/S-II):

  • காலியிடங்கள்: 100

  • சம்பளம்: ₹64,820 முதல் ₹93,960 வரை

  • கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் கூடிய சாட்டர்ட் அக்கவுண்டன்ட் (CA) தகுதி.

  • அனுபவம்: வணிக வங்கியில் (Scheduled Commercial Bank) குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம்.

  • வயது வரம்பு: 21 முதல் 33 வயது வரை.

வயது தளர்வு: அரசு விதிகளின்படி SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • SC / ST / PWD / பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்: ₹175/-

  • இதர பிரிவினர் (General / OBC / EWS): ₹850/-

Bank of Baroda
Bank of Barodaimage credit-cnbctv18.com

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Test), உளவியல் தேர்வு (Psychometric Test) மற்றும் குழு விவாதம் (Group Discussion) அல்லது நேர்காணல் (Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான bankofbaroda.in -இல் 'Careers' பகுதிக்குச் சென்று 16.10.2026 -க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • Bank of Baroda-வின் அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் செல்லவும். அங்கு BOB/HRM/REC/ADVT/2026/17 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.

  • “Apply Online” என்பதைக் கிளிக் செய்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்ற அடிப்படை விவரங்களை பதிவு செய்யவும்.

  • பதிவு செய்யப்பட்ட Registration Number மற்றும் Password மூலம் Login செய்யவும்.

  • விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, பணி அனுபவம் (தேவைப்படும் பதவிகளுக்கு) உள்ளிட்ட தகவல்களை சரியாக நிரப்பவும்.

  • Passport Size Photo, Signature மற்றும் தேவையான சான்றிதழ்கள் ஆகியவற்றை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுப்படி Upload செய்யவும்.

  • உங்கள் பிரிவிற்கு (General/ OBC/ EWS/ SC/ ST/ PwBD) ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.

  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து “Final Submit” செய்யவும்.

  • சமர்ப்பித்த விண்ணப்பத்தின் Printout / PDF-ஐ எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
தேர்வு கிடையாது: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை! உடனே விண்ணப்பீங்க..!!
Bank job
logo
Kalki Online
kalkionline.com