

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank Ltd - TMB) உள்ள காலிப் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தற்போது இந்தியா முழுவதும் 509 கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்கக் கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 ஏடிஎம்களையும் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் டி.எம்.பி. வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர் (Relationship Manager), மூத்த வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர் (Senior Relationship Manager) உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள், வங்கி சார்ந்த அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB)
வகை: வங்கி வேலை
காலியிடங்கள்: பல்வேறு
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.10.2026
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டும்
1. பதவி: வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர் Scale I
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.9.4 லட்சம் முதல் ரூ.13.0 லட்சம் வரை
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் (regular stream) இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் மற்றும் 60% மதிப்பெண்கள் பெற்றவர்கள்.
மேலாளர் பணிக்கான அனுபவம் – ஏதேனும் வங்கி ஒன்றில் கடன் வசூலித்தல் / கடன் பரிசீலனை / MSME கடன்கள் / சில்லறை வர்த்தகக் கடன்கள் (retail loans) தொடர்புடைய பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம்.
உதவி மேலாளர் பணிக்கான அனுபவம் – ஏதேனும் வங்கி ஒன்றில் கடன் வசூலித்தல் / கடன் பரிசீலனை / MSME கடன்கள் / சில்லறை வர்த்தகக் கடன்கள் (retail loans) தொடர்புடைய பணியில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம்.
2. பதவி: வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர் Scale II
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.9.4 லட்சம் முதல் ரூ.13.0 லட்சம் வரை
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் (regular stream) இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் மற்றும் 60% மதிப்பெண்கள் பெற்றவர்கள்.
மேலாளர் பணிக்கான அனுபவம்: ஏதேனும் வங்கி ஒன்றில் கடன் வசூலித்தல் / கடன் பரிசீலனை / MSME கடன்கள் / சில்லறை வர்த்தகக் கடன்கள் (retail loans) தொடர்புடைய பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம்.
உதவி மேலாளர் பணிக்கான அனுபவம் – ஏதேனும் வங்கி ஒன்றில் கடன் வசூலித்தல் / கடன் பரிசீலனை / MSME கடன்கள் / சில்லறை வர்த்தகக் கடன்கள் (retail loans) தொடர்புடைய பணியில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம்.
3. பதவி: மூத்த வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர் பதவி
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.17.6 லட்சம் முதல் ரூ.19.5 லட்சம் வரை
வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வழக்கமான பாடத்திட்டத்தின் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்ற எவரும் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்: கடன் ஏற்பாடு (sourcing) அல்லது கடன் செயலாக்கம் (processing) அல்லது MSME கடன்கள் தொடர்பான துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம்; இதில் மூன்று ஆண்டுகள் 'ரிலேஷன்ஷிப் மேனேஜர்' (Relationship Manager) ஆகப் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
இறுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு தேதிக்கு ஏறக்குறைய 4 முதல் 8 நாட்களுக்கு முன்னதாக, தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளைப் (hall tickets) பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் படித்த பிறகு, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் இணையதளத்தில் (https://apps.tmbdigital.bank.in/) உள்ள ‘Careers’ (பணி வாய்ப்புகள்) பக்கத்தின் வாயிலாக வரும் அக்டோபர் 7-ம்தேதிக்குள் 07.10.2026 வரை தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.