உடனே விண்ணப்பீங்க..!! பிரபல வங்கியில் 514 காலியிடங்கள் அறிவிப்பு!

bank jobs
bank jobs
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பேங்க் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் நிலையிலான கிரெடிட் ஆபிசர் (Credit Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : Bank of India (BOI)

வகை : வங்கி வேலை

காலியிடங்கள் : 514

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப தேதி : 20.12.2025

கடைசி தேதி : 05.01.2026

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி: Credit Officer SMGS-IV

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 01.11.2025 அன்று 30 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 102300 – 2980 (4) – 114220 – 3360 (2) – 120940

Credit Officer MMGS-III

காலியிடங்களின் எண்ணிக்கை: 60

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 85920 – 2680 (5) – 99320 – 2980 (2) – 105280

Credit Officer MMGS-II

காலியிடங்களின் எண்ணிக்கை: 418

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 01.11.2025 அன்று 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 64820 – 2340 (1) – 67160 – 2680 (10) – 93960

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/ Ex-s/ PWD – Rs.175/-

  • Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Test

  • Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://bankofindia.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
Say NO! டீ-காபி குடிக்கும்போது இந்த 4 உணவுகளுக்கு 'நோ' சொல்லுங்க... இல்லனா அவ்வளவுதான்!
bank jobs
logo
Kalki Online
kalkionline.com