#BREAKING : வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்..!

வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்! 3 நாள் வேலைநிறுத்தத்தால் நிதியமைச்சகம் அதிரடி!
BANK
BANK
Updated on

அகில இந்திய வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பான UFBU (United Forum of Bank Unions) வரும் செப்டம்பர் 28 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்களின் வசதிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) அனைத்துப் பொதுத்துறை மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

வங்கிகளின் வேலை நாட்களை வாரத்துக்கு ஐந்து நாட்களாகக் குறைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,28 முதல் 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான, யு.எப்.பி.யு., அழைப்பு விடுத்துள்ளது.

வங்கி தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நேற்று நடந்த சமரசப் பேச்சில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. . செப்.,28-க்கு முன் வார இறுதி விடுமுறை வருவதால், இந்த போராட்டத்தால் தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், செப்.,30 அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால், பணப் பரிவர்த்தனை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கும். ஓய்வூதியம் புதுப்பித்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகியவையும் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்:

  • வாரத்திற்கு 5 நாட்கள் வேலை: வாரத்தின் அனைத்து நாட்களிலும் 5 நாட்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்துவது.

  • பென்ஷன் சீரமைப்பு: பழைய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவதுடன், சீரான பஞ்சப்படி (Dearness Allowance) வழங்குவது.

  • பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS): புதிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) உள்ள ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்குவது.

செப்டம்பர் 26 (சனி) மற்றும் செப்டம்பர் 27 (ஞாயிறு) ஆகிய வார இறுதி விடுமுறை நாட்களைத் தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30 வரை வேலைநிறுத்தம் நடைபெற்றால் தொடர்ச்சியாக 5 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி மத்திய நிதியமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இணைந்து முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் படி, செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்துப் பொதுத்துறை வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிக் கிளைகள், ஏடிஎம் சார்ந்த கிளைகள் மற்றும் கரன்சி செஸ்ட்கள் (Currency Chests) வழக்கம்போல் முழுமையாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

bank strike
bank strikeimage credit-zeebiz.com

செப்டம்பர் 30 ஆம் தேதி வங்கிகளின் நிதியாண்டு அரையாண்டு கணக்கு முடிக்கும் (Half-yearly closing) முக்கியமான நாளாகும். இதனால் வேலைநிறுத்தம் நடந்தால் வங்கிச் சேவைகள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் சந்தை நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்படலாம்.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது அத்தியாவசிய வங்கிப் பணிகளை வேலைநிறுத்த நாட்களுக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ளுமாறும், மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம் (ATM) போன்ற டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துமாறும் வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

அதேவேளையில், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வண்ணம் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு வங்கி நிர்வாகங்களும், அரசும் தொழிற்சங்கங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி PF தகவல்களை வாட்ஸ் அப் மூலமாகவே பெறலாம்.. வந்தாச்சு சூப்பர் வசதி..!!
BANK
logo
Kalki Online
kalkionline.com