மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் பொறியியல் பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களில் ஆர்வமுள்ள மற்றும் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள தகுதிகளை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணிவாய்ப்பு பற்றிய விவரங்கள், காலியிடங்கள், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.
மொத்தமாக 610 பயிற்சி பொறியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE/B.Tech மற்றும் B.sc படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பாரத் எலக்ட்ரானிஸ் நிறுவன வலைத்தளமான bel-india.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
1.UR, EWS, OBC பிரிவுகளுக்கு: ₹177/-
2. SC, ST மற்றும் PWBD பிரிவுகளுக்கு : கட்டணம் ஏதும் இல்லை
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தும் முன் , விண்ணப்பத்தில் உள்ள தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை ஒருமுறை சரிபார்த்து கொள்ளவும்.ஒரு முறை செலுத்தப்பட்ட கட்டணம் எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு திரும்ப வழங்கப்பட மாட்டாது.
வயது வரம்பு:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் காலியிடத்திற்கான ,பொதுப் பிரிவு மற்றும் EWS பிரிவினருக்கான வயது வரம்பு (01-09-2025 அன்று) 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
OBC பிரிவினருக்கான வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும் .
SC/ST பிரிவினருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.
PwBD (மாற்றுத் திறனாளிகள்) பிரிவில் குறைந்தபட்சம் 40% அல்லது அதற்கு மேற்பட்ட இயலாமை உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளுக்குப் பொருந்தக்கூடிய தளர்வுடன் கூடுதலாக 10 ஆண்டுகள் தளர்வும் கிடைக்கும்.
வயதைக் கணக்கிட SSLC/SSC/ISC மதிப்பெண் அட்டை மற்றும் அரசு அடையாள ஆவணங்களில் குறிப்பிட்ட பிறந்த நாள் ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி:
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் BE/ B.Tech/ B.Sc ஆகிய 4 வருட பொறியியல் படிப்புகளில் முக்கியப் பாடமாக மின்னணுவியல் , இயந்திரவியல் , கணினி அறிவியல், மின்னியல் ஆகிய ஏதேனும் ஒரு பொறியியல் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முதல் வருடத்திற்கு மாதம் ₹30,000/- ஒருங்கிணைந்த ஊதியமாகவும், 2வது வருடத்திற்கு , மாதம் ₹35,000/- ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டால், 3வது வருடத்தில் இருந்து மாதம் ரூ.40,000/- அடிப்படை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்ச்சி செய்யப்படும் முறை:
தகுதி அளவுகோல்களை சரி பார்த்து ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக பட்டியலிடப்படுவார்கள்.
இவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும்.
BEL இணையதளத்தில் இருந்து எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வேறு வழியில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட மாட்டாது.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள், பெங்களூரில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும், இதில் 85 கேள்விகள் தொழில்நுட்பம் மற்றும் பொது அறிவு பற்றி கேள்விகள் இருக்கும்.
ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 மதிப்பெண்ணும், ஒவ்வொரு தவறான பதிலுக்கு 0.25 எதிர்மறை மதிப்பெண்ணும் கிடைக்கும்.எழுத்துத் தேர்வின் முடிவுகள் BEL இணையதளத்தில் பதிவேற்றப்படும்,
வெற்றி பெற்றவர்கள் ஆவணச் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) இணையதளத்தை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 24-09-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-10-2025