மக்களே உஷார்..! இந்த 6 பணப்பரிவர்த்தனைகளை செய்தால் வருமான வரி நோட்டீஸ் வரலாம்..!

இந்த 6 பணப்பரிவர்த்தனைகளை நீங்கள் செய்தால் உங்கள் வீட்டிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும்.
மாதிரி படம்
மாதிரி படம்
Published on

நேர்மையாக வருமான வரி செலுத்துவோருக்கு கூட, வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வருவது பெரும்பாலும் பதற்றத்தையே ஏற்படுத்தும். ஆனால், உண்மையில் இந்த நோட்டீஸ்கள் பெரும்பாலும் வழக்கமானவையாகவே இருக்கின்றன. அவை நாம் செய்த பிழைகளை தெரிவிப்பதற்காக அல்ல, தவிர்க்கக்கூடிய மற்றும் சரிசெய்யக்கூடிய நேர்த்தியான செயல்பாடாகவே இருக்கும். வருமான வரி நோட்டீஸ் என்பது பொதுவாக எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும், அதற்கான காரணம், பின்னணி மற்றும் அதற்கு பதிலளிக்கும் சரியான வழிமுறை பற்றி தெரிந்து கொண்டால், அதை எளிதாக சமாளிக்க முடியும்.

அந்த வகையில் தனிநபரின் வங்கி வைப்பு, பரஸ்பர நிதி முதலீடுகள், சொத்து பரிவர்த்தனைகள் மற்றும் பங்கு வர்த்தகம் போன்ற பண பரிவர்த்தனைகள் வருமான வரியின் கண்காணிப்பின் கீழ் வருகின்றன. வரி செலுத்துவோர் மற்றும் வரி செலுத்தாத நபர்கள், சில நேரங்களில் தங்கள் வருமானத்தை விட அதிக அளவு பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள்.

நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்காக இந்த பரிவர்த்தனைகளை செய்கிறோம். ஆனால் இவை வருமான வரித்துறையின் நோட்டிஸ்களுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்..? அபராதம் வருமா ?
மாதிரி படம்

இந்த 6 பணப்பரிவர்த்தனைகளை நீங்கள் செய்தால் வருமான வரித்துறை நிச்சயமாக உங்கள் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பிவிடுவார். அந்த வகையில் ஒரு தனிநபர் என்ன மாதிரியான பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், வருமான வரித்துறையின் நோட்டீஸை எதிர்கொள்ள நேரிடும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

1. உங்களுடைய வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ஒரு வருடத்திற்கு 10 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் வருமான வரிதுறையிடம் இருந்து உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

2. உங்களுடைய நடப்பு வங்கிக்கணக்கில் இருந்து ஒரு வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்வது அல்லது பணத்தை எடுத்தாலும் அதற்கான காரணத்தை கேட்டு உங்களுக்கு வருமான வரிதுறையிடம் இருந்து நோட்டீஸ் வந்து விடும்.

3. கிரெடிட் கார்டு பில் பேமொண்டை ரொக்க பணமாக ரூ.1 லட்சமும் வருடத்திற்குள் ரூ.10 லட்சத்திற்கு பணப்பரிமாற்றம் நடந்திருந்தாலும் உங்களுக்கு வருமான வரிதுறையிடம் இருந்து நோட்டீஸ் வரும்.

4. FD டெபாசிட் ரூ.10 லட்சத்திற்கு மேல் போனாலும் வருமான வரிதுறை அதற்கான காரணத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பும்.

5. mutual fundல் வருடத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்தாலும் வருமான வரித்துறை அதற்கான காரணத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பும்.

6. ஒரு வருடத்திற்கு ரூ.30 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்குபவர்கள் அதற்கான நிதி ஆதாரத்தை வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி நடவடிக்கைகளை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் ரூ.50 லட்சத்துக்கும், கிராமப்புறங்களில் ரூ.20 லட்சத்துக்கும் நடந்த சொத்துப் பரிவர்த்தனை விவரங்களை கேட்டு வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்.

இதையும் படியுங்கள்:
12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி விலக்கு... இப்போ சொந்த வீடு வாங்கலாமா?
மாதிரி படம்

இதுபோன்ற விஷயங்களை தெளிவாக தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் பணப்பரிவர்த்தனை செய்வதன் மூலம் வருமான வரித்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com