பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் சிவன் காலமானார்!

பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் சிவன் காலமானார்!
Published on

சையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் நாடக எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் வரதராஜன். இவரது மகன் பாவலர் சிவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 60.

சிவா என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர், இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் இணைந்து பணியாற்றி வந்தார். கிதார் இசைக்கலைஞரான சிவன் சில படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். இன்று காலமான சிவனின் மறைவுச் செய்தியை அறிந்த இளையராஜாவின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

பாவலர் சிவனின் மறைவுச் செய்தியை அறிந்த திரைப்படத் துறையினரும் மற்றும் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைப்பட இசையமைப்பாளர் தினா வெளியிட்டிருக்கும் தனது இரங்கல் செய்தியில், ’’இசைஞானி அவர்களின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் கிதார் இசைக் கலைஞர் சிவராமன் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com