#BIG NEWS: பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு.! தீவிரமடையும் போர்.!

America - Iran War
America - Iran war
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. முதற்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது ஈரான்.

எங்களுடைய நிபந்தனைகளை முழுமையாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டால் மட்டுமே, போர் நிறுத்தம் சாத்தியம் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 வாரங்களாக நீடித்து வரும் போரால் கச்சா எணணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தப் போர் நிறுத்தம் உலக நாடுகளுக்கு அவசியம் என்ற நிலையில் ஈரான் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: அமைதிப் பேச்சுவார்த்தையை மறுத்தால்... ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை..!
America - Iran War

ஈரானுக்கு செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தும் அமெரிக்காவின் கடல் வழி முற்றுகையை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே ஈரானின் முக்கிய நிபந்தனையாக இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் கோரிக்கைகள் அதிகப்படியானவை என்றும், எதார்த்தத்திற்கு புறம்பாக இருக்கிறது எனக் கூறி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது ஈரான்.

குறிப்பாக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நடத்த முடியாது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறும் பட்சத்தில், அந்நாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரானைச் சேர்ந்த ராணுவத் தளபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: பறக்கும் படை வேட்டை: ரூ.1,200 கோடியை தாண்டிய பறிமுதல் - உச்சகட்ட பரபரப்பில் தமிழ்நாடு!
America - Iran War
logo
Kalki Online
kalkionline.com