மத்திய அரசின் 'மாஸ்டர் பிளான்' - இனி விமான டிக்கெட் முன்பதிவில் ஒரு பைசா கூட எக்ஸ்ட்ரா கிடையாது!

aviation industry
aviation industry
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விமான இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக மார்ச் 18, 2026 அன்று புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

விமானங்களில் ஜன்னலோர மற்றும் முன்பக்க இருக்கைகளை தேர்ந்தெடுக்கக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க, 60% இருக்கைகள் எந்தவிதக் கூடுதல் கட்டணமுமின்றி பயணிகளுக்கு இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும் என மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. பல விமான நிறுவனங்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பொழுது தங்களுக்கு விருப்பமான இருக்கையை தேர்ந்தெடுப்பதற்காக கூடுதல் கட்டணங்களை வசூலித்து வந்தன. இந்த புதிய உத்தரவின் மூலம் பயணிகளுக்கு நியாயமான விலையில் பயணத்தை உறுதி செய்கிறது.

இந்த புதிய விதிமுறைகள் மார்ச் 26, 2026 முதல் நடைமுறைக்கு வருகின்றன. ஒரே டிக்கெட்டில்(PNRல்) பயணிப்பவர்களுக்கு அருகருகே இருக்கை ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விமானத்திலும் 60% இருக்கைகள், இருக்கை தேர்வு கட்டணம் (Seat Selection Fee) இல்லாமல் பயணிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஒரே எண்ணில்(PNRல்) பதிவு செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அரசு வெளியிட்டுள்ளது. விமானப் பயணம் தொடர்பான விவரங்களை பயணிகளுக்கு அவர்களது தாய் மொழியில் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

டிக்கெட்டில் பெயர் போன்ற விவரங்களை தவறுதலாக குறிப்பிட்டு முன்பதிவு செய்ததை 24 மணி நேரத்திற்குள் திருத்தம் செய்தால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது. இந்தப் புதிய உத்தரவுகள் பயணிகளுக்கு நியாயமான விலையில் பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! மே 8-க்குள் இதை செய்யாவிட்டால் அவ்வளவு தான்!
aviation industry
logo
Kalki Online
kalkionline.com