

பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமடைந்த தாமரைச்செல்வி அமைச்சர் அருண்ராஜ் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது குற்றச்சாட்டு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே பலருடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்று நம்பி தான் இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் பலருக்கும் பரீட்சை இல்லாத புது முகமாக தான் தாமரை செல்வி கலந்து கொண்டார். நாட்டுப்புற கலைஞராக இவருக்கு ஒரு சிலர் மட்டுமே பரிச்சயமானவராக இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது.
தற்போது சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கும் தாமரை சில பெண்களுடன் சேர்ந்து திருமண மண்டபங்களில் எக்ஸ்போ நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் தாமரை, பதிவிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில் அவர், சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜையும், திருச்செங்கோடு மக்களை நம்பி எக்ஸ்போ நடத்த வந்தாகவும், ஆனால் அந்த ஊரில் இருக்கும் பெரிய கடைக்காரர்கள் தன்னை அங்கு எக்ஸ்போ நடத்தக்கூடாது என்று தடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நானும் சிலரும் சேர்ந்து செங்குன்றம் திருமண மண்டபத்தில் கடந்த 5,6 தேதிகளில் எக்ஸ்போ நடத்த புக் செய்தோம். ஆனால் போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. ஏன்னா அங்குள்ள பெரிய கடைக்காரர்கள் நான் எக்ஸ்போ நடத்தக்கூடாது என்று புகார் அளித்திருந்தனர். உடனே நாங்க ஐகோட்டில் அனுமதி (permission) வாங்கி விட்டோம்.
அதன் பிறகு கடந்த 10 நாட்களாக, உங்களை பார்க்கலாம் என்பதற்காக உங்கள் சுற்றுவட்டாராத்தில் சுற்றிக்கொண்டு இருந்தோம்.
உங்களுடைய பிஏ மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்கள் எல்லாரிடமும் பேசி எப்படியாவது உங்களை மீட் பண்ண வேண்டும் என்று முயற்சி செய்தேன். அந்த பைல் (File) உங்களிடம் இருக்க. ஆனால் நீங்க அவங்க ஏன் என்னை பார்க்கனும். பார்க்க வேண்டாம், அந்த பைல் சரியாக இல்லை உடனே கேன்சல் செய்ய சொல்லீட்டிங்க.
நானும் தவெக தான். உங்களுக்காகவும் (அருண் ராஜ்) நான் பிரசாரம் செய்திருக்கிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா, இல்லையா என்று தெரியவில்லை. உங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக, தூங்கியவர்களை கூட எழுப்பி ஓட்டு கேட்டு இருக்கிறேன். அருண் ராஜ் சார் ரொம்ப நல்லவரு, அவருக்கு ஓட்டு போட்டீங்கன்னா மக்களுக்கு நல்லது பண்ணுவாருன்னு நினைச்சி, ஓட்டு கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்க என்னை சந்தித்து பேசக்கூட முடியாதுன்னு சொல்லி இருக்கீங்க.
நான் இந்த எக்ஸ்போவில் மாற்றுத்திறனாளிகள், கஷ்டப்படுகிற நிறைய பேருக்கு இலவசமாக ஸ்டால் கொடுத்திருக்கிறேன். ஆனா நீங்க ஒட்டுமொத்தமா நடத்தக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க. அனுமதி வாங்கியும் நடத்தக்கூடாதுனு சொல்லிட்டீங்க.
அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், ஒரு ஸ்டாலுக்கு ரூ.1000 வசூலித்து கட்டியிருப்பேன். 50 ஸ்டாலுக்கு அரசாங்கத்திற்கு 50,000 ரூபாய் கட்டி இருப்போம். ஆனா ஓட்டுமொத்தமா நடத்தவே கூடாதுன்னு அடிச்சி உட்கார வைப்பது ரொம்ப மனசுக்கு கஷ்டா இருக்கு சார்.
இந்த ஊருக்கு தான் சப்போட் பண்ணுவோம். இந்த ஊர்க்காரர்கள் தான் முக்கியம் என்று நீங்க சொல்வது எந்த விதத்தில் நியாயம். அரசாங்கத்தை விட அரசியல் ரீதியாக நிறைய பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கிறது. நான் முழுசா நம்பினேன். கண்டிப்பாக அருண் ராஜ் சார் சப்போட் பண்ணுவாருன்னு. அவங்க ஊரு தான் முக்கியம் என்று நினைத்து விட்டார். நீங்க (அருண் ராஜ்) தமிழ்நாட்டிற்கே அமைச்சர். எங்களுக்கும் நீங்க அமைச்சர் தானே. ஒருமுறை எங்களை பார்க்க அனுமதி கொடுத்திருக்கலாமே. நீங்களோ, நான் ஏன் பார்க்கனும். வேண்டாம்னு சொல்லிட்டீங்க.
உங்க ஊரை விட்டு நாங்க மனநிறைவா போறோம். ஏன்னா இங்க எக்ஸ்போ நடத்தவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இந்த மாதிரி கஷ்டப்பட்டவங்க எல்லோரும் ஓட்டு போட்டதால் தான் சார் எல்எல்ஏ ஆகியிருக்கோம் என்பதை மறந்துடாதீங்க.
எனக்கு இதனால் பெரும் நஷ்டம் தான். ஆனாலும் சின்ன சின்ன ஸ்டால் போடுவதற்காக வந்தவங்க தான் ரொம்ப பாவம்.
ஆனா ஓட்டு... இப்போ இல்ல, எப்போவுமே என் ஓட்டு, எங்க குடும்பத்தில் உள்ள அனைவரின் ஓட்டும் தவெகவிற்கு தான். ஏன்னா விஜய் சாரை ரொம்ப பிடிக்கும். நல்ல மனுசன். CM சாருக்காக இறங்கி ஓட்டு கேட்க வந்தேன். எந்த பிரசாரத்திற்கும் போனதே இல்லை. ஆனால் அவருக்காக தான் நான் முதல் முறையாக எலக்ஷனில் ஓட்டு கேட்டு போனேன்.
ஆனா இப்போ எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றதும் எங்களை சந்திக்க கூட மாட்டேங்கிறீங்க. நான் இந்த எக்ஸ்போவை நடத்துறது எனக்காக மட்டும் அல்ல. என்னை போல எத்தனையோ பேரு கஷ்டப்படுறாங்க எல்லோருக்கும் ஒரு ஆதாயம் கிடைக்கும் என்று தான் நினைத்து தான் நடத்துறேன். நீங்கள் என்னை மட்டுமல்ல இந்த எக்ஸ்போவை நம்பி இருந்த அனைவரையுமே ஏமாத்திட்டீங்க. இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தாமரை செல்வி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளதில் வைரலான நிலையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.