916 ஹால்மார்க் மட்டும் போதாது.. இந்த 6 இலக்க எண் இல்லையென்றால் நகை வாங்காதீர்கள்..!

நகை கடைகளில் ஏமாறாமல் இருக்க ஒவ்வொரு நகைக்கு பின்னாலும் இருக்கும் இந்த குறியீட்டை உடனே சோதிக்கவும்.
தங்கம் விலை
தங்கம் விலைAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

நீங்கள் வாங்கும் தங்க நகையில் BIS Logo மற்றும் 916 இருந்தால் மட்டும் இது உண்மையான தங்க நகை என்று கூற முடியாது. நீங்க வாங்கும் தங்க நகையில் HUID Number இருந்தால் மட்டுமே அது உண்மையான தங்க நகையாகும்.

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் சில முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கு நுகர்வோராகிய நாம் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.

தற்போது தங்கம் விலை குறைந்து கொண்டே வருவதாலும், பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும் மக்கள் அதிகளவில் தங்க நகைகளை வாங்கி வருவதால் இது போன்று போலியான தங்கத்தை (Fake Gold) விற்று ஏமாற்றும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

தங்க நகை வாங்கும் போது ஏமாறாமல் இருக்க, போலியான தங்கத்தை (Fake Gold) கண்டறியும் முக்கிய வழிகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் இதோ:

பண்டிகை காலத்தில் அவசரமாக நகை வாங்கும் போது பொதுமக்கள் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க சில எளிய பரிசோதனைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுவது அவசியமாகும்.

போலி தங்க மோசடியில் இருந்து உஷாராக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தங்கம் வாங்கும் போது BIS (Bureau of Indian Standards) மற்றும் 916 மட்டுமே பார்த்து வாங்காமல், HUID என்ற நம்பரையும் பார்த்து வாங்க வேண்டும். HUID நம்பர் ஒவ்வொரு தங்க நகைகளுக்கு பின்னாலும் இருக்கும். தற்போதைய விதிகளின்படி, ஒவ்வொரு தங்க நகையிலும் 6 இலக்க தனித்துவமான HUID (Hallmark Unique Identification) எண் லேசர் மூலம் பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

BIS Care App என்ற செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, நாம் வாங்கிய நகையில் உள்ள 6 இலக்க HUID எண்ணை உள்ளிட்டால், அந்த நகை உண்மையானதா, எங்கு சான்றளிக்கப்பட்டது போன்ற அனைத்து விவரங்களை உடனே அறிந்து கொள்ள முடியும். இதை வைத்து நாம் வாங்கிய தங்க நகையின் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது, BIS Care Appல் HUID எண்ணை போட்டவுடன் நகைக்கடையின் பதிவு எண் (Assaying & Hallmarking Centre - AHC Details), நகையைச் சோதித்து முத்திரையிட்ட மையத்தின் விவரம், நகையின் தரம் (காரட் - 22K, 18K போன்றவை), நகையின் வகை (வளையல், சங்கிலி, மோதிரம் போன்றவை), முத்திரையிடப்பட்ட தேதி போன்ற அனைத்து விவரங்களும் தெரிந்து விடும்.

செயலியில் காட்டும் விவரங்களும், உங்களிடம் உள்ள நகையின் வகையும் (உதாரணமாக செயலி 'Ring' என்று காட்ட, உங்களிடம் இருப்பது 'Bangle' ஆக இருந்தால் அது போலி) சரியாகப் பொருந்த வேண்டும். அப்படிப் பொருந்தினால் மட்டுமே அது உண்மையான ஹால்மார்க் சான்றளிக்கப்பட்ட தங்கம் ஆகும்.

அதேசமயம், நகையின் துல்லியமான எடை (எத்தனை சவரன் அல்லது கிராம்) மற்றும் நீங்கள் வாங்கிய குறிப்பிட்ட நகைக்கடையின் பெயர் நேரடியாக செயலியில் காட்டப்படாது. ஆனால், நகைக்கடைக்கு வழங்கப்பட்ட பதிவு எண் (Registration Number) இருக்கும்.

gold shopping
gold shoppingAI Image

அதை வைத்து அது அங்கீகரிக்கப்பட்ட கடைதானா என்பதை உறுதி செய்யலாம்.

இதில் அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் மட்டுமே அது ஒரிஜினல் தங்கம். ஒரு HUID நம்பருக்கு ஒரு ஜிஎஸ்டி பில் தான் உருவாக்க (generate) முடியும். அதாவது, ஆதார் எண் எப்படி ஒரு மனிதருக்கு ஒன்றுதான் இருக்குமோ, அதேபோல ஒரு HUID (Hallmark Unique Identification) எண் என்பது குறிப்பிட்ட ஒரு நகைக்கு மட்டுமே உரியது.

அதாவது ஒரு குறிப்பிட்ட HUID நகையை விற்கும்போது, அதற்கான ஜிஎஸ்டி பில்லில் (GST Invoice) அந்த HUID எண் கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டும். இது ஒரு நகையை முறைப்படி ஒருமுறை மட்டுமே விற்க நுகர்வோருக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

அந்த HUID எண்ணை வைத்து ஒருமுறை மட்டுமே சட்டப்பூர்வமான ஜிஎஸ்டி (GST) பில் உருவாக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
தங்க நகையில் நடக்கும் பகீர் மோசடி..! இந்தியாவில் பரவி வரும் 'பங்களாதேஷ் ரெட் கோல்ட்'..!
தங்கம் விலை

ஒரு HUID எண்ணைக் காட்டி ஒரு வாடிக்கையாளருக்கு பில் போட்டுவிட்டு, அதே HUID எண்கொண்ட பில்லைப் பயன்படுத்தி மற்றொரு வாடிக்கையாளருக்கு வேறு நகையை விற்றால், அது வரி ஏய்ப்பு ஆகும்.

அதாவது, இரண்டாவது விற்கப்பட்ட நகைக்கு அரசாங்க கணக்கில் ஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை (வரி வசூலித்திருந்தாலும் அது அரசிடம் சேராது) என்றுதான் அர்த்தம்.

எனவே, நீங்கள் வாங்கும் நகையின் HUID எண்ணை மத்திய அரசின் 'BIS Care' செயலியில் உள்ளீடு செய்து, அது என்ன வகையான நகை (வளையல், செயின், மோதிரம்) மற்றும் அதன் எடை எவ்வளவு என்பதைச் சரிபார்க்கவும்.

நீங்கள் வாங்கும் ஒரிஜினல் ஜிஎஸ்டி பில்லில், அந்த நகையின் HUID எண் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முக்கிய அறிவிப்பு: இனி அனைத்து வெள்ளி நகைகளுக்கும் HUID கட்டாயம்..!
தங்கம் விலை

இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளில் ஏமாறாமல் இருக்க, தங்க நகைகளை வாங்கும்போது இந்த HUID சரிபார்ப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.