தங்க நகையில் நடக்கும் பகீர் மோசடி..! இந்தியாவில் பரவி வரும் 'பங்களாதேஷ் ரெட் கோல்ட்'..!

தங்கத்தின் விலை அதிகரித்துகொண்டே இருக்கும் நிலையில் அதற்கு இணையாக போலி தங்க நகைகளும் சந்தையில் வரத்தொடங்கியுள்ளது.
fake gold
fake goldAI Image
Published on

நடுத்தர மற்றும் எளிய மக்களின் சேமிப்புத் திட்டங்களில் முதன்மையானதாகத் திகழும் தங்கம், தற்போது சாமானியர்களின் எட்டாக்கனியாக மாறி வருகிறது. 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே புதிய உச்சங்களைத் தொட்டு வரும் தங்கம் விலை, பிப்ரவரி மாதத்தில் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை நடுவில் சற்று குறைந்திருந்தாலும் மீண்டும் இறங்கியதை விட அதிகமாக ஏறிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ஒரு கிராம் ரூ.14,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் விலை ரூ.1,19,120 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தங்கத்தின் விலை அதிகரித்துகொண்டே இருக்கும் நிலையில் அதற்கு இணையாக போலி தங்க நகைகளும் சந்தையில் வரத்தொடங்கியுள்ளது. அதுதான் தங்கத்தை போல் காட்சியளிக்கும் பங்களாதேஷ் ரெட் கோல்ட் (Bangladeshi Red Gold).

பங்களாதேஷ் ரெட் கோல்ட் என்பது உண்மையான தங்கம் அல்ல. இதை எப்படி செய்திருக்கிறார்கள் என்றால், செம்பு, நிக்கல், துத்தநாகம் மற்றும் டங்ஸ்டன் போன்ற உலோகக் கலவைகளை (Alloy) சேர்த்து இந்த போலியான தங்கத்தை உருவாக்குகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ஜாக்கிரதை..! இந்த காரணத்துக்காக தங்க நகையை அடகு வைக்க போறீங்களா? உங்க நகை கைவிட்டு போகலாம்!
fake gold

இது பார்ப்பதற்கு 100% தங்கம் போல இருந்தாலும், இதில் தங்கம் (Au) சுத்தமாக இருப்பதில்லை. ஆனால் இது உண்மையான தங்கத்தைப் போலவே பளபளப்பாக இருக்கும். இதை நீங்கள் உரசி பார்த்தால் கூட தங்கம் போலவே இருக்கும். போலி என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. இது மறுவிற்பனை மதிப்பு இல்லாத, குறைந்த தரம் கொண்ட உலோகக் கலவை ஆகும். XRF (X-ray Fluorescence) சோதனை அல்லது காரட் மீட்டர் மூலம் மட்டுமே இது போலி என உறுதி செய்ய முடியும்.

அதை விட எளிமையான வழியில் நீங்கள் வாங்கும் தங்க நகைகள் போலி, உண்மையானதா என்பதை கண்டறிய இந்த சோதனையை செய்து பாருங்கள்.

நீங்கள் வாங்கும் தங்க நகையில் HUID நம்பர் இருக்கும். அரசாங்கத்தில் விதிமுறைகளில்படி ஒவ்வொரு தங்க நகைகளிலுமே அந்த HUID நம்பர் (Hallmark Unique Identification) கண்டிப்பாக இருக்கும்.

உங்களுடைய போனில் BIS CARE APPஐ பதிவிறக்கம் செய்து அதில் உள்ளே சென்றால் Verify Hallmark என்ற ஆப்ஷன் இருக்கும். இதில் நீங்கள் வாங்கிய தங்க நகையின் HUID நம்பரை போட்டால் அந்த நகை எப்போது செய்தது, எங்கு செய்தது, ரிஜிஸ்ட்ரேஷன் ஆனது எப்போது, என்ன கேரட் தங்கம் என்பது போன்ற அனைத்து விவரங்களும் தெளிவாக வந்துவிடும்.

இதன் மூலம் நாம் வாங்கிய தங்க நகை உண்மையான தங்கமா இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். நிறைய நகைக்கடைகளில் நீங்கள் வாங்கும் தங்க நகையை 22 காரட் தங்கம் தான் என்று சொல்லி அதற்கான பணத்தை வாங்கி விடுவார்கள். ஆனால் நீங்க BIS CARE APP-ல் போல் சோதனை செய்து பார்த்தால் தான் தெரியும் அது 18 காரட் தங்கம் என்று. அதனால் மக்களே இதுபோல் ஏமாறாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் தங்க நகையை வாங்கும் போது BIS CARE APPல் போய் சோதனை செய்து கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
தங்க நகை காணாமல் போனால் இழப்பீடு கிடைக்குமா? இதோ முழு விவரம்..!
fake gold

எனவே தங்க நகைகளை வாங்கும்போது ஹால்மார்க் (Hallmark) முத்திரையை சரிபார்த்து, நம்பகமான கடைகளில் வாங்குவது சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com