

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி இன்று உயிரிழந்தார். உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த இவருடைய வயது 84. சென்னை பாலவாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் நடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த சிந்தி என்ற குடும்ப வகையைச் சார்ந்த மோகினி பாலகாட்டைச் சேர்ந்த பிஎஸ் மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2023-ல் அவருடைய கணவர் பி எஸ் மணி இறந்த நிலையில் தற்போது மோகினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே உடல் நிலை குறைவாக சிகிச்சை பெற்று வந்த மோகினி சற்றுமுன் உயிரிழந்துள்ளார். அஜித்குமாரின் தாயார் மறைவிற்கு திரை உலகினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அஜித் குமாரின் குடும்ப வழக்கப்படி அவரது தாயாரின் இறுதி சடங்குகள் மிக எளிமையாக குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மோகினி அவர்களுக்கு அனுப் குமார் அஜித்குமார் மற்றும் அனில் குமார் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக கார் ரேசஸிங்கில் முழு பங்களிப்புடன் ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்குமார், தற்போது துபாயில் இருக்கிறார். இந்நிலையில் தாயார் இறந்த துயர செய்தியைக் கேட்டு அவர் உடனடியாக தமிழகம் திரும்பவுள்ளார்.
தனது தாயாரின் மீது அதிக அன்பு செலுத்தும் நடிகர் அஜித்குமார், தாயாரின் பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலம் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.