#BREAKING: இந்தி திணிப்பை ஏற்கிறதா அதிமுக.! முதல்வர் கேள்வி.!

MK Stalin
MKS
Updated on

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கையை பரப்பி வருகிறது மத்திய அரசு. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தி திணிப்பை ஏற்க்கிறதா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு இந்தி பேசும் மாநிலங்களில், அவர்கள் மற்ற மொழிகளை கற்பார்களா என்றும் அவர் கேட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : இனி சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை கிடையாது.! ஜன் விஸ்வாஸ் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்.!
MK Stalin

முதல்வரின் எக்ஸ் தளப் பதிவில், “தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல; அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும்.

இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்ற போர்வையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்மைத்துவம் நிறைந்த மொழிப் பாரம்பரியத்தைத் திட்டமிட்டு ஒதுக்கி, இந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை அரசியல் நோக்கத்துடன் பா.ஜ.க. தலைமையிலான NDA அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

மும்மொழிக் கொள்கை என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும். திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வும், அதன் NDA கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனரா?” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: மக்களே உஷார்..! சர்ச்சைக்குரிய SMS அனுப்பினால் சிறை நிச்சயம் : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
MK Stalin
logo
Kalki Online
kalkionline.com