

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி 17வது சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அதிமுக நேரடியாக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. தற்போது மூன்றாம் கட்டமாக 17 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில், 13 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டியிடும் நிலையில், எஞ்சிய 12 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்டமாக முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட 23 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை மார்ச் 25-ல் அதிமுக வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 127 வேட்பாளர்களின் பெயர்களை நேற்று முன்தினம் (மார்ச் 27) அறிவித்தது அதிமுக. இதுவரை 150 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட அதிமுக, சற்றுமுன் மூன்றாம் கட்டமாக 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து விட்டது. இதன்படி மொத்தம் 167 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் 121 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதில் சென்னையில் மட்டும் 12 தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் போட்டியிடுகிறார் அதே போல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து அதிமுகவின் ஆதிராஜாராம் போட்டியிடுகிறார்.
3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்:
1. கொளத்தூர் - சந்தான கிருஷ்ணன்
2. ஆலந்தூர் - S.சரவணன்
3. ஆலங்குடி - தன. விமல்
4. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - RS. ராஜேஷ்
5. வில்லிவாக்கம் - S. R. விஜயகுமார்
6. திருச்சுழி - M.S.R.ராஜவர்மன்
7. திருவிக நகர் (தனி) - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
8. எழும்பூர் (தனி) - அபிஷேக் ரங்கசாமி
9. சோழிங்கநல்லூர் - KP.கந்தன்
10. துறைமுகம் - ராயபுரம் மனோ
11. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஆதிராஜராம்
12. ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி
13. அண்ணா நகர் - கோகுல இந்திரா
14. விருகம்பாக்கம் - விருகை V.N.ரவி
15. வேளச்சேரி - M.K.அசோக்
16. தியாகராய நகர் - சத்தியநாராயணன்
17. திட்டக்குடி (தனி) - முருகுமாறன்.