#BREAKING: மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து! 40,000 இந்தியர்கள் தவிப்பு.!

Air India
Air India
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வரும் நிலையில், வருகின்ற மே 31-ம் தேதி வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது ஏர் இந்தியா. இந்த அறிவிப்பு இஸ்ரேலில் வசிக்கும் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: சென்னையில் வருமான வரித்துறை 10 இடங்களில் திடீர் சோதனை.!
Air India

இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிப் பயணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தலைநகர் டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் வருகின்ற மே 31-ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

வேலை அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக இஸ்ரேலில் இந்தியா வர விரும்பும் இந்தியர்கள், மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இஸ்ரேலில் இருந்து இந்தியா வர விரும்புபவர்கள், எகிப்து அல்லது ஜோர்டான் நாடுகளின் நில எல்லைகள் வழியாக சென்று அங்கிருந்து விமானத்தின் மூலம் இந்தியா திரும்பலாம் என ஆலோசிக்கப்படுகிறது.

டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது

இதையும் படியுங்கள்:
என்னைப் பொறுத்தவரை பும்ராவுக்கு தான் எப்போதும் முதலிடத்தைக் கொடுப்பேன் - சச்சின்..!
Air India
logo
Kalki Online
kalkionline.com