#BREAKING: மொடக்குறிச்சியில் களமிறங்கும் அண்ணாமலை.! பாஜக-வின் பலே திட்டம்.!

BJP
Annamalai
Updated on

தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள மூன்று தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த தொகுதிகள் அதிமுக வசம் இருப்பதால், அவர் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியது. இதன்படி தற்போது ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அண்ணாமலையை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே அண்ணாமலை விருப்பம் தெரிவித்த தொகுதிகள், கிடைக்காத சூழலில் அவர் போன தேர்தலில் போட்டியிடுவாரா என்ற சந்தேகமும் இருந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவருக்கு மொடக்குறிச்சி தொகுதியை பாஜக ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தவெக வேட்பாளர் பட்டியலில் முக்கிய மாற்றம்.!
BJP

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி, மொடக்குறிச்சியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது அந்த தொகுதியை பாஜக கோட்டையாக மாற்ற கட்சி தலைமை திட்டமிட்டு வருகிறது. ஆகையால் அண்ணாமலை மொடக்குறிச்சியில் நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
​2 மணி நேர உடற்பயிற்சி இனி 20 நிமிடம் தான்! வியப்பில் ஆழ்த்தும் ஸ்டார்ட்-அப்!
BJP
logo
Kalki Online
kalkionline.com