#BREAKING: தவெக வேட்பாளர் பட்டியலில் முக்கிய மாற்றம்.!

TVK Vijay
TVK Vijay
Updated on

தமிழ்நாட்டில் முதன்முறையாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார் விஜய். ஆனால் சில வேட்பாளர்கள் மீது அக்கட்சியை சேர்ந்த தொண்டர்களே அதிருப்தியாக இருப்பதால், வேட்பாளர்களை மாற்ற தவெக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய இனி 55 நிமிடங்கள் போதும்.!
TVK Vijay

மாற்றுக் கட்சியில் இருந்து சிலர் தவெக-வில் இணைய பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் அறிவித்த தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 234 பேர் கொண்ட பட்டியலில் மூன்றிலிருந்து 5 பேர் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை வேட்பாளர்கள் மாற்றப்பட்டால், கட்சிக்குள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேசமயம் மாற்றுக் கட்சியினர் தவெக-வில் இணைவது, அக்கட்சிக்கு பலமாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இனி பெட்ரோல் பங்குகளில் மண்ணெண்ணெய் கிடைக்கும்.! மத்திய அரசு அதிரடி.!
TVK Vijay

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com