#BREAKING: நம்மை அரசியல் வலிமை அற்றவர்களாக மாற்ற முயற்சி - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.!

Delimitation
CM Stalin
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தென்னிந்திய மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.

நேற்று தொகுதி மறுவரையறையை எதிர்த்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடியை ஏற்றி போராட்டத்தை தொடங்கினார். மேலும் தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலையும் தீயிட்டு எரித்தார்.

இந்நிலையில் நம்மை அரசியல் வலிமை அற்றவர்களாக மாற்றிட தொகுதி மறுவரையறையை மத்திய அரசு பயன்படுத்துவதாக சற்று முன் தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: அதிகாரப் பசிக்கு அடகு வைக்கப்படும் ஆந்திரா.! சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த மாணிக்கம் தாகூர்.!
Delimitation

தொகுதி மறுவரையறை குறித்து தெரிவித்த முதல்வர், “தங்கள் சுயநலத்துக்காக தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே RSS எஜமானர்களின் காலடியில் வைக்கின்றனர். தொகுதி மறுவரையறை எனும் சதித் திட்டத்தால், நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக மாற்ற முனைகிறார்கள்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நேற்று மக்களவையில் வாக்கெடுப்பு நடந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.

தென்னிந்திய மாநிலங்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் நேராது என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தொகுதி மறுவரையறை: தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது - மத்திய அரசு உறுதி!
Delimitation
logo
Kalki Online
kalkionline.com