#BREAKING: 3 நாட்களுக்கு கருப்புக் கொடியை பறக்க விடுங்கள்.! திமுக தலைமை அறிவுறுத்தல்.!

Delimitation
MK Stalin
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறையை எதிர்த்து இன்று கருப்பு கொடியேற்றும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். மேலும் தொகுதி மறுவரையறை தொடர்பான ஆவண நகலை முதல்வர் தீயிட்டு எரித்தார்.

இதனையடுத்து திமுக அமைச்சர்களான கே.என்.நேரு, மா. சுப்பிரமணியன், கீதா ஜீவன், ரகுபதி மற்றும் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்களும் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுக்க திமுக கழகங்கள் மற்றும் அலுவலகங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. திருச்சி கருமண்டபம் தெரு முழுக்க கருப்புக் கொடி மயமாகவே காட்சியளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தொகுதி மறுவரையறை: தமிழகம் எங்கும் தீ பரவட்டும் - முதல்வர் ஸ்டாலின்.!
Delimitation

இன்று திமுகவால் ஏற்றப்பட்ட கருப்புக் கொடியை அடுத்த 3 நாட்களுக்கு பறக்க விட வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் தொகுதி மறுவரையறையை எதிர்த்து திமுக தலைமை மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது தெளிவாக தெரிகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு தாக்கல் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படியுங்கள்:
#JUST IN: விஜய் யாருக்கு ‘ஸ்கெட்ச்’ போடுகிறார்? சீமான் விமர்சனம்.!
Delimitation
logo
Kalki Online
kalkionline.com