#BREAKING: பீகார் பிரபலத்தை களத்தில் இறக்கிய முதல்வர் ஸ்டாலின்.!

Thejaswi Yadhav - Stalin
CM Stalin
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கும் சூழலில், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பீகார் எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் ராஸ்டிரிய ஜனதா தளம் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வருடன் இணைந்து திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: அமைதிப் பேச்சுவார்த்தையை மறுத்தால்... ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை..!
Thejaswi Yadhav - Stalin

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். தமிழ்நாட்டில் வருகின்ற இருபதாம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடியவுள்ளது.

இந்நிலையில் பீகாரில் இருந்து எதிர்க்கட்சித் தலைவரை களம் இறக்கி இருக்கிறார் முதல்வர். தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் திமுகவுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்பதால், திமுக நிர்வாகிகள் இடைவிடாத பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தமிழகத்திற்கு வருகை புரிந்து, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: பரபரக்கும் அரசியல் களம்: சீமானை எச்சரித்த செல்வப்பெருந்தகை - என்ன நடந்தது?
Thejaswi Yadhav - Stalin
logo
Kalki Online
kalkionline.com