#BREAKING: டெல்லியில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள்.! தொகுதி மறுவரையறைக்கு எதிராக கனிமொழி நோட்டீஸ்!

Delimitation
Delimitation
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தொகுதி மறுவரையறை சட்டத்தை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 11 மணகக்கு நாடாளுமன்றம் கூடும் சூழலில், அதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றன.

ஏற்கனவே நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் உத்திரப்பிரதேசத்திலும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் இதன்மூலம் தொகுதிகள் அதிகமானாலும், பாஜகவின் மோசமான எண்ணம் சரியல்ல என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தொகுதி மறுவரையறை: தமிழகம் எங்கும் தீ பரவட்டும் - முதல்வர் ஸ்டாலின்.!
Delimitation

இன்று காலை திமுக தலைவர் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்பி நோட்டீஸ் அளித்துள்ளார்.

இதன்மூலம் இன்று மசோதா தாக்கல் செய்யப்படும் போது எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என்றே தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: அதிகாரப் பசிக்கு அடகு வைக்கப்படும் ஆந்திரா.! சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த மாணிக்கம் தாகூர்.!
Delimitation
logo
Kalki Online
kalkionline.com