#BREAKING: தேவர் - அண்ணாமலை ஒப்பீடு: சர்ச்சையில் சிக்கிய செல்லூர் ராஜூ.!

Sellur raju - Annamalai
Annamalai
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், செல்லூர் ராஜூவை ஆதரித்து மதுரையில் பிரச்சாரம் மேற்கொணடார் அண்ணாமலை. அப்போது அண்ணாமலையை முத்துராமலிங்கத் தேவருடன் ஒப்பிட்டு செல்லூர் ராஜூ பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மேற்கொண்ட பிரச்சாரத்தில், 'முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் தான் அண்ணாமலை' என செல்லூர் ராஜூ பேசினார். இதற்கு தேவர் அமைப்புகள் பலவும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இதையும் படியுங்கள்:
#JUST IN: அமலுக்கு வரும் ஈரான் மீதான கடல்வழி முற்றுகை.! இனி ஹார்மூஸ் தேவையே இல்லை.!
Sellur raju - Annamalai

அதிமுக சார்பில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் செல்லூர் ராஜூ, அண்ணாமலையை தேவருடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும் காங்கிரஸ் நிர்வாகி மாணிக்கம் தாகூரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் கூறுகையில், “செல்லூர் ராஜூவின் நகைச்சுவை பேச்சிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. தேவர் ஐயாவை அவமதித்த செல்லூர் ராஜுவிற்கு, சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதி மக்கள் தக்க பதிலடியை கொடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: "உதயநிதி ஸ்டாலின் முதல்வராக மாட்டார்" பியூஸ் கோயல் அதிரடி கருத்து.!
Sellur raju - Annamalai
logo
Kalki Online
kalkionline.com